Popular Posts

Sunday, April 26, 2009

தமிழ் ஈழம்தமிழினமழிய பார்த்திருப்பாயோ?-உன் உடலினில்


தமிழ்ரத்தம் ஓடவில்லையோ?-அட மனித நேயம்


தமிழகத்தில் செத்துவிட்டதோ?-உலகமே


தமிழினப் படுகொலை தனையே நிறுத்திடத்


தான்மாட்டாயோ? அனாதைகளாக


ஆதரவற்று காட்டினிலே சொந்த நாட்டினிலே


அகதிகளான கொடுமைதனை பாராயோ?


சோலைகளே எங்கே போயினவோ?--அய்யகோ


பாலை நிலமாயே ஆயினவோ?-எம்மக்கள்


நிராதரவாய் நிர்கதியாய் போயினரே


பாரோரே பார்த்தீரா?இந்த மனித


மாமிசம் தின்னும் ராஜபக்சே ஹுட்லரை


மிஞ்சிவிட்ட ஆதிக்க இனவெறிதனையே


இவ்வுலமே மன்னிக்காதே அவனது


ஆதிக்கந்தனையே சுட்டெரித்திட வேண்டாமா?


மனிதமனங்களே இதற்கொரு நிரந்திரதீர்வு


வ்ருகின்ற வரையினிலே நல்லமனிதர்களுக்கு


ஊனுமில்லை உறக்கமில்லையே!
Monday, April 20, 2009

ஆணுக்கும் பெண்ணுக்கும்!


அங்கே சென்றமனம் திரும்பக் காணோமே-அன்பே

இங்கே மையல் என்பது இதுதானோ?-காதல்

தலைக்கேறுதே -உள்ளம்

தடுமாறுதே- நானும்

சகித்திடுவேனோ?-எண்ணங்களை

மறந்திடுவேனோ?-அவனும்

என்னைப் போலவே -பிரிவினில்

தவித்திடுவானே-இதையே

தமிழ் கவிஞர்களே -ஏனோ

பாடமறந்திட்டாரோ-என்னமோ

பெண்ணுக்குத்தான் காதலுண்டு

ஆணுக்கு இல்லையென்று

எண்ணிவிட்டாரோ?பிரிவும்,ஊடலும்

ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவென்று உணர்ந்து

இனிவரும் கவிஞரும் எழுதிட மாட்டாரோ?

உள்ளங்களை இணைக்கும்!


நெஞ்சே அன்பு நெஞ்சே-- இல்லற

இன்பத்தின் திறவுகோலே-காதலன் அவனே

கொஞ்சியெனைக் கூடுவானெனில்

கூடலே கூடாய் --என்

காதலுக்கு ஈடாய்

செண்டு நெஞ்சை கைக்கொண்டு நெருடி

மேகாடை நீக்கி அணைத்து

கண்டுமனது இரண்டும் இணங்க

ஆசை உண்டாக்கி

மோகசுகம் தேக்கி

முத்தமழை பொழிந்து-அனு

ராகமது இசைத்து-இப்போதோ

ஊடலது போதும்-அது

உறவுகளை கூட்டும்-இனித்திடும்

உள்ளங்களை இணைக்கும்

இரும்பைப் பொன்னாக்கும் பச்சிலையே உள்ளதென்பாரே

அடுத்தவர் மனதறியும் வித்தை நானறிவேன் என்பாரே

கிழவனை இளைஞனாக்கும் மூலிகை என்வசமுண்டு என்பாரே

உலகத்தையே ஒரு நொடியில் சுற்றிவரும் நுட்பமுண்டு என்பாரே

ஆயிரம்முறை உறவுகொண்டாலும் காமம் அடங்காதமருந்துண்டு என்பாரே

செத்தவரை பிழைக்கவைக்கும் மாமருந்து என்னிடமுண்டு என்பாரே-அவரை

உண்மையாய் இருக்கச் சொன்னாலோ எங்கேயோ ஓடிப்போனாரே!


Thursday, April 16, 2009

கோடிக்கைகள் உயர்த்து!


கைகண்ட மருந்தே நம்தமிழ் சித்தமருந்தே

கை நீட்டி இரந்துவாழும் நிலைகொள்ளாதே!-உன்

கைபார்த்து செய்யாத காரியங்கள் தவறாகுமே

கைமாற்று தவறில்லை திரும்பகொடுத்திட வேண்டுமே- நீயும்

கையாளாக கயவனுக்கு துணைபோக வேண்டாமே

கையமர்த்து அன்பில்லாத வன்முறைகூட்டத்தையே

கையிருப்பு இல்லாமல் வானத்தை அளக்காதே

கைபிடித்தவரையே காலமெல்லாம் துணை நடத்து- ந்ல்ல

கைங்கரியம் செய்துவிட மறந்துவிடாதே-அடுத்தவர் நிலத்தை

கையகப்படுத்தி ஆக்ரிமப்பு செய்திடாதே- நீயும்

கைராசி என்றுசொல்லி மூட நம்பிக்கைவளர்க்காதே-உன்

கைகலப்பு கொலைவெறிதனில் முடியும்-உனது

கைதனைகுலுக்கு அது நட்புதனில் மேலோங்குமே-என்றும்

கைகோர்த்து துணையோடு நடைபோட்டிடுவாய்

கைக்குத்தல் அரிசி உண்டு நலந்தேடுவாய்

கைவாள்விட்டு வேறுவாள்தேடி அலையாதே

கைசெலவிற்கு காசில்லாமலே கடைத்தெருவிற்கு போகாதே-யாருக்கும்

கைப்பாவையாகி தலையதலைய ஆட்டாதே

கைதட்டி திறமைக்கு மரியாதை செய்திடுவாயே-

கைதனைக் கழுவாமல் உணவருந்தாதே

கைகூடும் நேரத்தில் தூங்கிவிடாதே

கைக்குதவாத கஞ்சனாக காட்சிதாராதே-உன்

கைகொடுத்தாலே எதிர்கைகிடைக்கும் மறவாதே

கை நனைக்காதே மதியாதார் தன்வீட்டிலே-கோடி

கைகள் உயர்த்து பாட்டாளி அரசு நலம்சேர்க்கும்
Wednesday, April 15, 2009

காரணமென்ன?
காலையிலே பூத்தபூ காட்டுமல்லி நானிருக்க
காடுசுத்தி என்னத்தமகன் காடுகாடா சுத்துறானே
மாலைவரை சுத்திபாத்து மயக்கத்தில மாமன்மகன்
மல்லிகப்பூ மந்தாரமா நானிருக்க அசந்துபுட்டானே
சோலையிலே தனிப்பூவா சூட்ட நான் காத்திருக்க
சும்மாசும்மா வெட்டித்தனமா வயக்காட்டுல திரியுறானே
ஓலையிலே நானெழுதி ஓயாமலே ஒதுங்கிருக்க
ஒட்டாமலே ஓரத்திலே மறைஞ்சிருக்கும் காரணமென்ன?
தட்டுல பழமிருக்க தங்கச்சரம் நானிருக்க
தட்டுகெட்ட மாமன்மகன் தறிகெட்டு அலையுறானே

பூவே பூவே
காதல்பூவே காதல்பூவே-உனது எனது
எண்ணத்தில் பூத்தஒரே ஒருபூவே
காதல்பூவே காதல்பூவே
வண்ணத்தில் ரெண்டே ரெண்டே பூவே-உனது
கண்களிலே பூத்தபூவே
பார்வைபூவே பார்வைபூவே- நமது
முத்தாய்ப்பாய் பூத்தபூவே
மூன்றே மூன்றுபூவே-மழலையோடு
சேர்ந்திருக்கும் முத்தப்பூவே
முத்தப்பூவே முத்தப்பூவே
நான்கே நான்குபூவே
நல்லோராய் பூத்தபூவே
நாலுபேரோடு சேர்ந்துவாழும்
நம்வாழ்வுபூவே நம்வாழ்வுபூவே


வேண்டும்
உற்றாரும் வேண்டும்-மகிழ்வான
ஊராரும் வேண்டும்—சிறப்பான
உலகாரும் வேண்டும்-அன்பாலே
பேர்புகழும் வேண்டும்- நல்லோராம்

கற்றாரும் வேண்டும்—எல்லாமும்
கற்றிடவும் வேண்டும்-உலகமக்கள்
எல்லோரும் இன்புற்று வாழ்கின்ற
நல்ல நிலையும் வேண்டும்


2
அன்பில்லாத மனமதிலே
கல்லாத பேருக்கு கல்விபுகட்டும்
கற்றோரை நட்புகொண்டேனே-தனியுடைமையாம்
பொல்லாங்கு செய்கின்ற
வஞ்சகரை புரிந்துகொண்டேனே
நல்லதையே செய்கின்ற-பொதுவுடைமையாம்
நல்லோரை துணைகொண்டேனே
எங்கும் சிவனிருப்பான் என்போரே
அன்பில்லாத மனமதிலே-எங்கும்
எப்போதும் எவனுமிருக்க மாட்டானே-மனித நேயமற்ற
சமுதாயம் இருந்தென்ன? இல்லாமல் போனால் என்ன?

புரட்சியெனலாம் அவளை
அழகெனலாம் அறிவெனலாம்
உலகெனலாம் உயிரெனல்லாம் அவளை
அன்பெனலாம் பண்பெனலாம்
சிறப்பெனலாம் சிந்தனையெனலாம் அவளை
கருவெனலாம் திருவெனலாம்
நிலவெனலாம் மலரெனலாம் அவளை
விதியெனலாம் கதியெனலாம்
நிதியெனலாம் மதியெனலாம் அவளை
கருணையெனலாம் சம உரிமையெனலாம்
சுதந்திரமெனலாம் புரட்சியெனலாம் அவளை


மூட நம்பிக்கையாம்
மதமென்னும் மாயைவெறி-மதவெறி
மனிதனைக் கெடுத்தது போதும் –மனித
விரக்திக்கு அடிப்படை-மூட நம்பிக்கையாம்
விதியே ஆகும்-அதனாலே அதைவிட்டிடுவோம்ஒப்பற்ற சமுதாயம்
உழைப்பவன் என்னடா?
முதலில்லாமல் கிடைக்கின்ற
மலிவான பொருளாடா?
உழைப்பவரையே தலைமைதாங்க வைக்கின்ற
ஒப்பற்ற சமுதாயம் உருவாக்க வேண்டுமடா

3
கன்னிமனசுல
முந்தி அழுக்குல முனைமுடியின் சிக்குல-உன்னோட
முந்தானை முடிச்சுல -என்னோட
முகங்கவுந்து கிடக்குது-அடியே வாழ்க்கை
சுகங்கெட்டு தவிக்குது-அடியே
சும்மாக் கிடந்த சங்கத்தான் ஊதிக்கெடுத்தது யாருடி
கம்மாக்கரையில காஞ்சிக்கிடக்கிற நெலாவத்தான் பாருடி
காட்டுமலையில உலாவருகின்ற தென்றலத்தான் சேருடி
கன்னிமனசுள ஆசை உள்ளத்தத்தான் கூறுடி

பொதுவுடைமை பொன்னுலகம்
உற்றாரை வேண்டுவேன் ஊராரை வேண்டுவேன் – நல்ல
உழைப்பாரை வேண்டுவேன் படைப்பாளர் வேண்டுவேன்- நல்ல
பேர்வேண்டுவேன் சான்றோராம் கற்றாரை வேண்டுவேன்
மக்கள் நலத்தை வேண்டுவேன் நல்லமனிதரை வேண்டுவேன்
மனித நேயரை வேண்டுவேன் மக்கட்பண்பினை வேண்டுவேன்
எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமை வேண்டுவேன் மனிதர்வாழ்தத்துவம் வேண்டுவேன்
பொதுவுடைமை பொன்னுலகம் வேண்டுவேன்


விசித்திரமே
ஞயம்பட பேசு ஞயம்பட பேசு
இனிமை உண்டாகவே
லயமுடன் பாடு லயமுடன் பாடு
தனிமை தனியாகவே-அதிக
உறக்கமும் கொள்ளாதே-அதிக
மயக்கமும் கூடாதே
சித்திரம் பேசாதே சித்திரமே
விசித்திரம் பேசாதே விசித்திரமே

Monday, April 13, 2009

எல்லோருக்கும் எல்லாத் தேவைகளுமென்றாலும்

சிங்கத்தை குரங்காக ஆட்டுவிப்போம் என்பாரே
பூனையை புலியாக்குவேன் என்று மார்தட்டுவாரே
பட்டமரத்தினில் பால்வரச்செய்வோம் என்பாரே
எட்டிக்காயை மாங்கனியாய் ஆக்கிடுவோம் என்பாரே
நெருப்பினிலெ நாட்டியமாடிடுவோம் என்பாரே-ஆனால் அந்தமாமனிதரோ
விலைவாசிதனை குறைத்துவிடச் சொன்னாலும்
எல்லோருக்கும் எல்லாத் தேவைகளுமென்றாலும்
அனைவருக்கும் உணவு,உடை,வீடு கொடுத்திட
போராடு என்றாலும். தனியுடைமை வஞ்சகரை
வீழ்த்திவிட ஓரணியில் சேருங்கள் என்றாலே ஏனோ?
காததூரம் ஓடுகின்றாரே

தலைவி உனக்கு

கண்ணுள்ளே என்னகண்டாய்?--காதலன்
கண்ணுள்ளே என்ன கண்டாய்?
காதல் பார்வை கண்டவளும் நீதானே
காதலை நெஞ்சினில் கொண்டவளும் நீதானே
காதலன் கண்ணிலே புகுந்தானா?
கருத்திலே நின்று சிரித்தானா?
காதலிமனதினை கெடுத்தானா?
கண்கணைதனை தொடுத்தானா?- நீயும்
கனவுவிண் ணிலே நடந்தாயோ?-விரக
தாபமும்மண்ணிலே கொண்டாயோ?
மயக்கமும் தயக்கமும் அடைந்தாயோ?
தலைவி உனக்கு தலைவனும் கிடைத்தானா?

அன்பாலே நட்பாலே

நல்லது சொல்லுவேன் என்றாயே மெல்லியளே
-காதலி நீயும் ஏனடி நாடகம் ஆடுகின்றாய்?--உன்னுள் நீயும்
காதலே இல்லையென்றாலும் நானும்
கவலை கொள்ளேனே- உன்னை நான் அன்பாலே நட்பாலே
கண்டதை நாளெல்லாம் எண்ணிஎண்ணியே உன் நினைவாலே
வாழ் நாள் முழுவதும் சுகங்கொள்வேனே நீயும் கனவிலே
வந்தும் அன்புத்தொல்லையே தந்தாலும் என்
வாழ் நாளெல்லாம் துயரம் கொள்ளேனே

காதலிஉன் இதழ்குவித்து

உலகமெல்லாம் தேடிவந்தேனே-உன்கண்ணில்
கலகமிட நாடி நின்றேனே-உந்தன்
உள்ளத்தை சொல்லடி காதலி-ஊடல்
கள்ளத்தை கைவிடு தோழி நீ -உன்
காதல் கனிவது காதலியுன் கண்ணிலா?
காதலன் என் மனதிலா?-ஊடல்
வாதம் இனிவேண்டாம் காதலன் நானென்று
காதலிஉன் இதழ்குவித்து உரைப்பாயே

தொலைக்காட்சித் தொடரோ?

என்னைத்தேடி நீ வந்தாயோ?
உனைத்தேடி நான் வந்தேனோ?-அடடா?
யாருக்குத் தெரியும் இந்தக் கதையே-காதல் இந்த
ஊருக்குள் பெரியகதையே-ஆரம்பம் என்ன?
சிறுகதையே அப்புறம் தானே பெருங்கதையே-அது என்றும்
முடியாத மகாபெரும் தொலைக்காட்சித் தொடரோ?

சமதர்மத்தினை ஏற்க தயங்காதே

அன்பை கனிவை அடக்கிவைக்காதே
அறிவை நட்பை ஒதுக்கிவைக்காதே
உறவை உரிமையை அமுக்கிவைக்காதே
உண்மையை நேர்மையை ஒழித்துவைக்காதே
காதலை ஊடலை மறைத்துவைக்காதே
கவிதையை கருத்தினை சொல்லமறக்காதே
கல்வியை கற்பித்தலை கற்றுத்தர மறுக்காதே
புரட்சியை புதுமையை உயர்த்த தவறாதே
ஒற்றுமையை உறுதியினை விட்டுவிடாதே
உழைப்பினை சமதர்மத்தினை ஏற்க தயங்காதே

தம்முயிரையே

அன்பில்லாத தனியுடைமையோ-தன்னலமாய்
எல்லாமே தனக்கென்று திமிரெடுக்கும்-அன்புள்ளாரின்
பொதுவுடைமையோ!தம்முயிரையே
பிறருக்கே கொடுத்திடுமே

தியாகத்தின் தழும்புகளோ?

மழைவெறித்த பின்னும்
மரத்தினில் தேங்கி நிற்கும் மழை நீரோ?-அது
எந்ததேசத்திலும் எப்போதும்
கடந்து நிற்கும் காட்சிகள் தானே- நான்
வாசித்த கவிதைகளோ?-என்றும் எந்தன் துணைத்
தோள்கொடுக்கும் புத்தகங்களோ?-எந்தன் மனதினில்
நிழலாடும் மலரும் நினைவுகளோ?-மனித நேயமின்னும்
சாகவில்லை என்று சத்தியம் செய்கின்ற
ஆலமரத்தின் விழுதுகளோ?
அடிமரத்தின் வேர்களோ?
தியாகத்தின் தழும்புகளோ?

Friday, April 10, 2009

வாழும் தத்துவத்தை!


பூம ணங்கம ழும்பொழிலே-உன்

கடைக்கண் சிவந்ததே- நெஞ்சினில்

ஆடி னாய் -கண்ணிலே

நாடி னாய் -தாய்மொழியிலே

பாடி னாய்-வசந்தத்தை

தேடினாய்-எல்லோரும் வாழும் தத்துவத்தை

எல்லோருக்கும் சொல்லிவிட

ஓடினாய்-இனிமையிலே எல்லோரும்
எல்லாமும் பெற நீயும் போராட
வாய்ச்சொல்லின்றி களமிறங்கி
உலக நாடெல்லாம் புரட்சிகர இயக்கத்தின்
கூராகி செயல்வீரனாய்
கூடினாய் தத்துவத்தை நடைமுறையில்
கூட்டினாய் மார்க்ஸீயத்தை நாட்டினாய்

அறிந்தியா?


தாய் நாவலத்தான் படித்தியா?-பாரதியாரின்,

பாரதிதாசன்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்

பாட்டுக்களைத்தான் படித்தியா?-திருமூலர்,

வள்ளலாரின் கருத்துக்களைப் படித்தியா?

சுஜாதாவின் எழுத்து நடைய படித்தியா?

பாலகுமாரனின் கருத்துச் செறிவ படித்தியா?

பட்டுக்கோட்டை பிரபாகரின் நகைச்சுவை நடையத்தான் படித்தியா

வாசிக்கும் வழக்கத்தத்தான் வளத்தியா?

நாட்டு நடப்பத்தான் படித்தியா?

நல்லதத்தான் படித்தியா?

மூலதனத்த படித்தியா?

மார்க்ஸீயம் படித்தியா?

மக்கள்ஜன நாயகத்த உயர்த்தினியா?-புரட்சிகர

மாற்றத்தத்தான் அறிந்தியா?

Sunday, April 5, 2009

தேடுதல் இல்லாத பறவைக்கு


ஒவ்வொரு பறவைக்கும்

உணவாக ஒரு புழு உண்டு; ஆனால்

அதனதன் கூட்டிலல்ல-தேடுதல் இல்லாத

பறவைக்கு இரைகளும் கிடைப்பதில்லை

இரைதேடிச் செல்லாத பறவைக்கு

பசிதானே என்றென்றும் சொந்தமாகும்

முயற்சி இல்லாத வாழ்க்கைக்கு-இவ்வுலகினிலே

அர்த்தமென்பது ஏதுமிங்கே இல்லையடா!

மனிதநேயம்


உலகத்தில் ஒளி நெறிகாட்டுவது கோவிலாகும்-ஆனால் மனித

உள்ளத்தில் மதவெறிகூட்டுவது கல்லறையாகும்-மனித நேயம்

உலகத்தில் நல்லோர்கள் காட்டுகின்ற பாதையாகும்-வேற்றுமையில் மக்களது

உள்ளங்களை வஞ்சகர்கள் பிரிக்கின்ற சதியாகும்-இதை அழித்து எழுந்து

உயர்ந்து நிற்கும் தத்துவமே பொதுவுடைமையாகும்-இதை கெடுக்க

உழைப்பவரை பிரிக்க நினைக்கும் தனியுடைமையாகும்

அக இனிப்பாலே


காதல் கண்ணதிலே

கனியும் நெஞ்சினிலே- அக இனிப்பாலே

சார்ந்தாரைச் சார்ந்தாளே

சாயும்தோளில் சாய்ந்தாளே-காதலிலே

சேர்ந்தாரை சேர்த்தாளே-அன்பாலே

சேர்த்தாரைச் சேர்ந்தாளே

இன்பத்துயர்


பச்சைக்கிளிகளே பாடும் குயில்களே

பறந்து செல்லும் பறவைகளே

பட்டுச்சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளே

கட்டுபாடற்ற காற்றினிலே

கலந்திசைக்கும் இன்னிசைப் பாடல்களே-என்

இச்சையுள்ள மாமனுக்கு அவன்பிரிவாலே- காதலி நான் பட்ட

இன்பதுயர் கூறிடவே மாட்டீரோ?

ராசாவே!


நானிங்கு நீயின்றி

தனிமையிலே இனிமையில்லையே

நீயங்கு- நானின்றி

ஒருமையிலே உன்மனதினில்

அமைதியில்லையே-இந்த பிரிவினையே

காகம் ஒண்ணுவந்து-உன்

வீட்டு முன்னே நின்னு

கரையலையோ என் ராசாவே?

சுகந்தானா?

சுந்தரியாள் நீயும் சுகந்தானா?-உன் இதயத்தில்

இருக்கின்ற என் இதயமும் சுகந்தானா?

அந்தரியே அன்பு சுந்தரியே-எனது வாழ்க்கைத்துணை

மந்திரியே இந்திரையே

காதல்மலர் சூட்டி நின்ற காதலியே-உனது

கன்னிமனம் எந்தனுக்கு தெரியாதா?-எனது

காளைமனம் உந்தனுக்கு புரியாதா?

நெஞ்சில்


நிறைகுடத்து தண்ணீரா

நிழலாடுது என்சதுரம்--இப்போ

குறைகுடத்து தண்ணீரா

குறைஞ்சதடா உன்னாலே

மறைவிருந்து பார்த்தாயா-கண்ணில்

மதுவூற்றி மயக்கிவிட்டாய்- நெஞ்சில்

மலர்கின்ற காதல்பூ

மலர்ந்ததடா நம்மாலே

படுத்தாலே உன் நினைவு

பாய்விரித்தால் பலகனவு

உண்டாலும் உறக்கமில்லை

உறங்கினாலும் தூக்கமில்லை

ஏக்கமது புடிச்சதடா

என்னுசுரு போகுதடா-என்னோட

தூக்கமது கொறைஞ்சதடா-ஏண்டா

நீவரவே காணோமடா-என்மனத்தை

அராவத வாளாகி-என்னை

அறுத்ததுவே போதுமடா

இரவினிலே வீசுதடா

இளங்காற்று நிலவொளியில்

இள நெஞ்சே வேகுதடா-உனக்கென்

தேமல்மொழி தெரியாதா?-என்

தேன்பேச்சு புரியாதா?

வாழை என்னுடலும்-உனை

வாட்டலையோ? நித்திரையில்

மாடப்புறா நாந்தானே

மாசுபடாச் சித்திரமே

கோடைக் கனவினிலே-கண்ணுக்குள்

கொதிக்கின்றேன் பெண்மணியே

Friday, April 3, 2009

ஒற்றுமை உயர்த்திடுமே!


துரும்பு தூணாகும் போது

தூணும் துரும்பாகாதோ

மடுவும் மலையாகுமே-ஒரு நாள்

மலையும் மடுவாகுமே

மாற்றம் உருவாகுமே- நம்

மனதும் சுகமாகுமே-

புயலும் தென்றலாகுமே-சூறாவளிச்

சுழலும் சுழன்றோடுமே-அதிகாரம்

திரும்பி ஓடிடுமே-அமைதி

திரும்ப வந்திடுமே-சம உரிமை

இலங்கையில் வந்திடுமே-தமிழர்

இன்னலும் தீர்ந்திடுமே-குண்டுசத்தம்

ஈழத்தில் மாறிடுமே--குழலோசை

இல்லத்தில் கேட்டிடுமே-- நாட்டில்

சந்தோசம் பாடிடுமே-சிங்களர்,தமிழர்

ஒற்றுமை உயர்த்திடுமே

Wednesday, April 1, 2009

போராலே தீர்வுகள் இல்லை,அரசியல் தீர்வொன்றே தீர்வாகுமே!


போராலே தீர்வுகள் இல்லையென்று

புரிந்துகொண்டார் விடுதலைப்புலிகளே-அரசியல்

தீர்வொன்றே தீர்வாகுமே -அரசில் சம உரிமை

வேண்டுமென்பதே நியாயமாகுமே-இனவெறி

அழிகவென்றே கொட்டுமுரசே-இலங்கையிலே

அமைதிவேண்டி கொட்டுமுரசே-அதிகார

இலங்கை அரசே உணர்ந்துகொள்வாய்-இன்னும்

பிடிவாதம் நீகொண்டு அழிந்துபோகாதே-உலக

நாடுகளே இலங்கைக்கு அறிவுறுத்துங்கள்-ஹிட்லர்

அதிகாரவெறி அழிவினையே உணர்த்துங்கள்-பாட்டாளி

அதிகாரமே இலங்கையிலே வருகிறவரையினிலே-இலங்கை

தமிழர்களின்,சிங்களரின் ஒற்றுமை ஏற்படுகிறவரையினிலே

தனியுடைமைச் சதிகாரர் சகுனி வஞ்சகங்கள்-இலங்கையிலே

தொடர்கதையாய் தொடர்வதுதான் நிற்காதே-மக்கள்

ஜன நாயகபுரட்சிதான் தீர்வென்ற உண்மைதனை-தமிழ்சிங்கள

இலங்கைமக்கள் உணர்ந்துவிட்டால் துன்பமில்லை