நிறைகுடத்து தண்ணீரா
நிழலாடுது என்சதுரம்--இப்போ
குறைகுடத்து தண்ணீரா
குறைஞ்சதடா உன்னாலே
மறைவிருந்து பார்த்தாயா-கண்ணில்
மதுவூற்றி மயக்கிவிட்டாய்- நெஞ்சில்
மலர்கின்ற காதல்பூ
மலர்ந்ததடா நம்மாலே
படுத்தாலே உன் நினைவு
பாய்விரித்தால் பலகனவு
உண்டாலும் உறக்கமில்லை
உறங்கினாலும் தூக்கமில்லை
ஏக்கமது புடிச்சதடா
என்னுசுரு போகுதடா-என்னோட
தூக்கமது கொறைஞ்சதடா-ஏண்டா
நீவரவே காணோமடா-என்மனத்தை
அராவத வாளாகி-என்னை
அறுத்ததுவே போதுமடா
இரவினிலே வீசுதடா
இளங்காற்று நிலவொளியில்
இள நெஞ்சே வேகுதடா-உனக்கென்
தேமல்மொழி தெரியாதா?-என்
தேன்பேச்சு புரியாதா?
வாழை என்னுடலும்-உனை
வாட்டலையோ? நித்திரையில்
மாடப்புறா நாந்தானே
மாசுபடாச் சித்திரமே
கோடைக் கனவினிலே-கண்ணுக்குள்
கொதிக்கின்றேன் பெண்மணியே
No comments:
Post a Comment