Popular Posts

Thursday, April 16, 2009

கோடிக்கைகள் உயர்த்து!


கைகண்ட மருந்தே நம்தமிழ் சித்தமருந்தே

கை நீட்டி இரந்துவாழும் நிலைகொள்ளாதே!-உன்

கைபார்த்து செய்யாத காரியங்கள் தவறாகுமே

கைமாற்று தவறில்லை திரும்பகொடுத்திட வேண்டுமே- நீயும்

கையாளாக கயவனுக்கு துணைபோக வேண்டாமே

கையமர்த்து அன்பில்லாத வன்முறைகூட்டத்தையே

கையிருப்பு இல்லாமல் வானத்தை அளக்காதே

கைபிடித்தவரையே காலமெல்லாம் துணை நடத்து- ந்ல்ல

கைங்கரியம் செய்துவிட மறந்துவிடாதே-அடுத்தவர் நிலத்தை

கையகப்படுத்தி ஆக்ரிமப்பு செய்திடாதே- நீயும்

கைராசி என்றுசொல்லி மூட நம்பிக்கைவளர்க்காதே-உன்

கைகலப்பு கொலைவெறிதனில் முடியும்-உனது

கைதனைகுலுக்கு அது நட்புதனில் மேலோங்குமே-என்றும்

கைகோர்த்து துணையோடு நடைபோட்டிடுவாய்

கைக்குத்தல் அரிசி உண்டு நலந்தேடுவாய்

கைவாள்விட்டு வேறுவாள்தேடி அலையாதே

கைசெலவிற்கு காசில்லாமலே கடைத்தெருவிற்கு போகாதே-யாருக்கும்

கைப்பாவையாகி தலையதலைய ஆட்டாதே

கைதட்டி திறமைக்கு மரியாதை செய்திடுவாயே-

கைதனைக் கழுவாமல் உணவருந்தாதே

கைகூடும் நேரத்தில் தூங்கிவிடாதே

கைக்குதவாத கஞ்சனாக காட்சிதாராதே-உன்

கைகொடுத்தாலே எதிர்கைகிடைக்கும் மறவாதே

கை நனைக்காதே மதியாதார் தன்வீட்டிலே-கோடி

கைகள் உயர்த்து பாட்டாளி அரசு நலம்சேர்க்கும்








No comments: