Popular Posts

Wednesday, April 15, 2009

காரணமென்ன?
காலையிலே பூத்தபூ காட்டுமல்லி நானிருக்க
காடுசுத்தி என்னத்தமகன் காடுகாடா சுத்துறானே
மாலைவரை சுத்திபாத்து மயக்கத்தில மாமன்மகன்
மல்லிகப்பூ மந்தாரமா நானிருக்க அசந்துபுட்டானே
சோலையிலே தனிப்பூவா சூட்ட நான் காத்திருக்க
சும்மாசும்மா வெட்டித்தனமா வயக்காட்டுல திரியுறானே
ஓலையிலே நானெழுதி ஓயாமலே ஒதுங்கிருக்க
ஒட்டாமலே ஓரத்திலே மறைஞ்சிருக்கும் காரணமென்ன?
தட்டுல பழமிருக்க தங்கச்சரம் நானிருக்க
தட்டுகெட்ட மாமன்மகன் தறிகெட்டு அலையுறானே

பூவே பூவே
காதல்பூவே காதல்பூவே-உனது எனது
எண்ணத்தில் பூத்தஒரே ஒருபூவே
காதல்பூவே காதல்பூவே
வண்ணத்தில் ரெண்டே ரெண்டே பூவே-உனது
கண்களிலே பூத்தபூவே
பார்வைபூவே பார்வைபூவே- நமது
முத்தாய்ப்பாய் பூத்தபூவே
மூன்றே மூன்றுபூவே-மழலையோடு
சேர்ந்திருக்கும் முத்தப்பூவே
முத்தப்பூவே முத்தப்பூவே
நான்கே நான்குபூவே
நல்லோராய் பூத்தபூவே
நாலுபேரோடு சேர்ந்துவாழும்
நம்வாழ்வுபூவே நம்வாழ்வுபூவே


வேண்டும்
உற்றாரும் வேண்டும்-மகிழ்வான
ஊராரும் வேண்டும்—சிறப்பான
உலகாரும் வேண்டும்-அன்பாலே
பேர்புகழும் வேண்டும்- நல்லோராம்

கற்றாரும் வேண்டும்—எல்லாமும்
கற்றிடவும் வேண்டும்-உலகமக்கள்
எல்லோரும் இன்புற்று வாழ்கின்ற
நல்ல நிலையும் வேண்டும்






2
அன்பில்லாத மனமதிலே
கல்லாத பேருக்கு கல்விபுகட்டும்
கற்றோரை நட்புகொண்டேனே-தனியுடைமையாம்
பொல்லாங்கு செய்கின்ற
வஞ்சகரை புரிந்துகொண்டேனே
நல்லதையே செய்கின்ற-பொதுவுடைமையாம்
நல்லோரை துணைகொண்டேனே
எங்கும் சிவனிருப்பான் என்போரே
அன்பில்லாத மனமதிலே-எங்கும்
எப்போதும் எவனுமிருக்க மாட்டானே-மனித நேயமற்ற
சமுதாயம் இருந்தென்ன? இல்லாமல் போனால் என்ன?

புரட்சியெனலாம் அவளை
அழகெனலாம் அறிவெனலாம்
உலகெனலாம் உயிரெனல்லாம் அவளை
அன்பெனலாம் பண்பெனலாம்
சிறப்பெனலாம் சிந்தனையெனலாம் அவளை
கருவெனலாம் திருவெனலாம்
நிலவெனலாம் மலரெனலாம் அவளை
விதியெனலாம் கதியெனலாம்
நிதியெனலாம் மதியெனலாம் அவளை
கருணையெனலாம் சம உரிமையெனலாம்
சுதந்திரமெனலாம் புரட்சியெனலாம் அவளை


மூட நம்பிக்கையாம்
மதமென்னும் மாயைவெறி-மதவெறி
மனிதனைக் கெடுத்தது போதும் –மனித
விரக்திக்கு அடிப்படை-மூட நம்பிக்கையாம்
விதியே ஆகும்-அதனாலே அதைவிட்டிடுவோம்



ஒப்பற்ற சமுதாயம்
உழைப்பவன் என்னடா?
முதலில்லாமல் கிடைக்கின்ற
மலிவான பொருளாடா?
உழைப்பவரையே தலைமைதாங்க வைக்கின்ற
ஒப்பற்ற சமுதாயம் உருவாக்க வேண்டுமடா





3
கன்னிமனசுல
முந்தி அழுக்குல முனைமுடியின் சிக்குல-உன்னோட
முந்தானை முடிச்சுல -என்னோட
முகங்கவுந்து கிடக்குது-அடியே வாழ்க்கை
சுகங்கெட்டு தவிக்குது-அடியே
சும்மாக் கிடந்த சங்கத்தான் ஊதிக்கெடுத்தது யாருடி
கம்மாக்கரையில காஞ்சிக்கிடக்கிற நெலாவத்தான் பாருடி
காட்டுமலையில உலாவருகின்ற தென்றலத்தான் சேருடி
கன்னிமனசுள ஆசை உள்ளத்தத்தான் கூறுடி

பொதுவுடைமை பொன்னுலகம்
உற்றாரை வேண்டுவேன் ஊராரை வேண்டுவேன் – நல்ல
உழைப்பாரை வேண்டுவேன் படைப்பாளர் வேண்டுவேன்- நல்ல
பேர்வேண்டுவேன் சான்றோராம் கற்றாரை வேண்டுவேன்
மக்கள் நலத்தை வேண்டுவேன் நல்லமனிதரை வேண்டுவேன்
மனித நேயரை வேண்டுவேன் மக்கட்பண்பினை வேண்டுவேன்
எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமை வேண்டுவேன் மனிதர்வாழ்தத்துவம் வேண்டுவேன்
பொதுவுடைமை பொன்னுலகம் வேண்டுவேன்


விசித்திரமே
ஞயம்பட பேசு ஞயம்பட பேசு
இனிமை உண்டாகவே
லயமுடன் பாடு லயமுடன் பாடு
தனிமை தனியாகவே-அதிக
உறக்கமும் கொள்ளாதே-அதிக
மயக்கமும் கூடாதே
சித்திரம் பேசாதே சித்திரமே
விசித்திரம் பேசாதே விசித்திரமே

No comments: