Popular Posts

Sunday, May 31, 2009

உண்மை உயரணும்!

நீரில் நீந்தனும்
நிலத்தில் நகரனும்
வானில் பறக்கனும்
வார்னால் மீனைப் போலவே
இறப்பு இறக்கனும்-என்றும்
இளமை இருக்கனும்
அன்பு சிறக்கனும்
உண்மை உயரணும்

போலிகளை நம்பாதீங்கனு!

போலிகளை நம்பாதீங்கனு சொன்னாரு -எங்க தலைவரு
போலிகளை நம்பாதீங்கனு சொன்னாரு
தலைக்கு டை அடித்து
தங்க பொய்பல்கட்டி
தலையில விக்வெச்சி
முகத்த சர்ஜரி பண்ணி வந்தாரா
கவரிங் கடை திறப்பு விழாவில
போலிகளை நம்பாதீங்கனு
பொழுதுசாய முழங்கினாரு

சிக்கலாகும்!

வாழ்க்கை என்ற ஒருவாத்தியமே-அது
வாசிக்கத் தெரிந்த மனிதருக்கே சங்கீதமாகும்-அழகிய
கோலமாம் அதைபுரிந்து கொள்ளாத மனிதருக்கோ-அவர்
வாழ்கின்ற நாளெல்லாம் சிக்கலாகும்

பணம்!

உண்மை என்ற மூன்றெழுத்துக்கு மதிப்பில்லை
அன்பு என்ற மூன்றெழுத்துக்கு மரியாதையில்லை
உரிமை என்ற மூன்றெழுத்துக்கு செவியில்லை
பணம் என்ற மூன்றெழுத்துக்கு மட்டும் ஏனிங்கு அக்கறை

பொரியிறயே

காயகறிக் காரன் மகனா நீ
கூவிகூவி பேசுறயே
போட்டோ கிராபர் மகனா நீ-பேச்ச
டெவலப் பண்ணி காட்டுறயே
பட்டாசு கடைக்காரன் மகனா நீ
பட படனு பொரியிறயே

இதயதுடிப்புகளோ?

எங்கள் தோட்டத்திலே
எத்தனை நறுமலர்களோ?
அவை அத்தனையும் எங்கள்
இளைய நெஞ்சங்களின்
இதய துடிப்புகளோ?
எதிர்காலத்தை உருவாக்கும் சிற்பிகளோ?
ஒற்றுமையில் சிறகடிக்கும் உழைப்போரோ?

மின்மினியும்,புல்லினமும்

விளக்கை சுமந்துகொண்டு
விடிய விடிய பறக்கும்
மின்மினி பூச்சிகளா?
புல்லினமாம் மூங்கிலே
புல்லாங்குழலாகி
புதியராகம் இசைத்தது - நீங்கள்
ஒரு நாளாவது
கேட்டதுண்டா?இல்லை அந்த
மூங்கில் புல்லினமும்-உங்களின் விளக்கு
வெளிசசத்த்தை தான் பார்த்ததுண்டா?

தாயே!

ஏ !ஏ! தென்றலே தென்றலே- நீயும் அன்னைக்கே
சிலுக்க சிலுக்க வீசுனயே
செந்தாழை மணம் பூசுனயே
செடிகொடி கூட பேசுனயே-இங்க ஏண்டி இன்னைக்கே
வீசாமத்தான் போகுற நீயே
எம்மேலதான் கோபமா தாயே

கண்ணம்மா!

வியப்பிருக்குது கண்குறிப்பில்
விருப்பிருக்குது புன்சிரிப்பில் அன்னம்மா
அன்பிருக்குது உன் நினைப்பில்
அறிவிருக்குது நம் நடப்பில் செல்லம்மா
ஆணும் பெண்ணும்
ஒண்ணா சேர்ந்தா-அதிகார
ஆளும்வர்க்கம் மண்ணாகும் நல்லம்மா
உழைப்பாளர் ஒற்றுமையில்
உருவாக்கும் பொன்னுலகம் கண்ணம்மா
சின்னவ மேலெனக்கு ஆசை- நான்
சிரிச்சாலும் விழுந்திடும் பூசை
ஆசை மாறிப் போனாலே மோசம்-சபல வேச
ஆசை கலைந்து போனாலே நாசம்
ஒழுக்கம் கெட்டுப் போனாலே பூசனம்

அடைக்கும் தாழே

வான்மழையாம் காதலன்
தான் தரும் காதலின்பமே-அவன்மேல்
தானே
ஆசைவைத்தேன் நானே-அவனின்
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழே

காலம்!

மலர்விரியாதா? -அங்கு
மணம் பரவாதா?-கண்ணில் காதல்
மின்னல் வராதா?-காதலன்
கருத்தினில் சேராதா?
ராதா வாராதா?-உன் நேசம்
வாசம் ஆகாதா?-காத்திருந்த
காலம் போகாதா?
வழியை மறிக்கும் மலரோடை தாண்டி
விழியூன்றி நீரில் விரல்பட்ட நேரம் -என்
இதயத்தில் நுழைந்தவளே-இன்ப
இமயத்தில் உயர்ந்தவளே
சிந்தொன்று வண்டுபாடும் சோலையிலே
வந்தென்னில் கவிதைகனி தந்தவளே-மாலையிலே

Thursday, May 28, 2009

மாற்ற்ங்கள்

இயற்கை விரித்துவைத்த நீலச்சேலையிலே-மின்னும்
ஆங்காங்கே வெள்ளைக் கருப்புக் கற்களே- நடசத்திர
மின்மினியாய் மினுமினுக்கும் வைரவைடூரியங்களே
செயற்கை இல்லாத விளக்கு வெளிச்சங்களே- நாள்தோறும்
எண்ணற்ற மாற்றத்தில் உருவாகி கருவாகும் அண்டங்களே
எண்ண எண்ண எட்டாத நனவுலகின் உண்மை மாற்றங்களே

Tuesday, May 26, 2009

கோ!ழியே !

வான்கோழியே ! வான்கோழியே!
வளைய வருகிற வான்கோழியே!
பெண் அல்லாமலே கொண்டை இருக்கும்
ஆண் இல்லாமலே தாடியிருக்கும்
அழகாய் ஆடிஓடி அழகுபடுத்தும்
அகோரமாய் கொக்கரிக்கும் வான்கோழியே- நீயும்
மயிலைப் பார்த்து ஆடவில்லை-உன்
ஒயிலைப் பார்க்க ஏன் ஆளில்லையோ?

குருவிகளா !

குருவிகளா? சிட்டுக்குருவிகளா?
கூட்டம் கூட்டமாகவே முற்றம்
வரையினில் வந்தே - நீங்களே
இரைதனை எடுத்த பின்னே
ஓட்டம் ஓட்டமாகவே ஓடும் -தாவி
ஓடிப் போயாடும்
குருவிகளா? சிட்டுக் குருவிகளா?

Friday, May 22, 2009

நீயேன் கொஞ்சல?

ஒடிக்க முடியாத கூந்தலை
ஒய்யாரமா ஆக்குவாளாம் சகுந்தலை
வளைக்க முடியாததை வளைத்து
சிங்காரமா வசீகரிச்சாளாம் அஞ்சலை -அவளே
மந்தாரமா மாலை நேர காத்துல
வந்தாளம்மா நீயேன் கொஞ்சல

Sunday, May 17, 2009

புரட்சியின் வழிப்பாதையும்!


புரியாதது புரியாதது

மருத்துவரின் கையெழுத்தும்-காதல்

மங்கையரின் மனப்போக்கும்

தெரியாதது தெரியாதது-அடையும்வரை

புரட்சியின் வழிப்பாதையும்--காதலரின்

சந்திக்கும் விழிப்பார்வையும்

Saturday, May 16, 2009

மாணவத் தம்பிக்கு!


தம்பி உனது குறிக்கோள்

நீ நடந்து செல்லும்

பாதையின் திசைகாட்டி -

வாழ்வினில் முன்னேறிய எல்லா பெரியோர்க்கும்-அனைத்து

சான்றோர்க்கும் நல்லதொரு குறிக்கோளே காரணம்

உனது வெற்றியின் முதல்படி

உனது குறிக்கோளில் ஒளிந்திருக்கிறது-அதனால்

உனது குறிக்கோளை முடிவுசெய்-ஏனென்றால்

உனது குறிக்கோளே - நீ

நடந்து செல்லும் பாதையின் திசைகாட்டி


உனது குறிக்கோள் நல்லதிசையில்

எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்

நீ ஒரு விஞ்ஞானி

நீ ஒரு வியாபாரி

நீ ஒரு விவசாயி

நீ ஒரு ஆசான்

நீ ஒரு சமூகப் பணியாளன்

நீ ஒரு நல்ல அரசியல்வாதி

நீ ஒரு நல்ல மருத்துவன்

நீ ஒரு நல்ல பொறியாளன்
நீ ஒரு இசைமேதை
நீ ஒரு கலைஞன்

நீ ஒரு நல்ல வழியினில் சமூகத்தில்

நீ யாராக வேண்டுமானாலும் ஆகலாம்


உனது குறிக்கோள் வெல்ல,வெற்றிகொள்ள

உனது குடும்பம்

உனது ஆசான்

உனது நண்பர்

உனது ஊரின் சான்றோர்கள்

அனைத்து நல்ல உள்ளங்களின் உதவி

உனது குறிக்கோளை ஜெயித்துக்காட்டும்


தம்பி

உனது கல்வியின் செம்மை-அதி

நீகாட்டும் அக்கறை

நீ கூறும் சரியான பதில்கள் வேண்டுமானால்

உனது வகுப்பறையினில் ;உன் ஆசானை

வேண்டுமானால் திருப்தி செய்யும்-ஆனால்

உனது தேர்வறையின் அந்த மூன்றுமணி நேரம் தானே

உன்னை இந்த வெளியுலகத்திற்கு

அறிமுகப் படுத்தும் -அதன்

அபரிதமான வெற்றிதானே-உன்னை

மேல் நோக்கி முன்னேற்றும் படிக்கட்டு


தம்பி உனது

புதியபாடங்கள் கடுமையான பாடங்கள்

படித்து நிறுத்திட


அனுபவத்தில் உனது ஞாபகத்தில்

அனைத்து பாடங்களும் நிற்பதற்கு

அதிகாலையோ? காலையோ? மாலையோ?

எந்த நேரம் உகந்ததென்று நீயே தேர்வுசெய்து

படிக்க அறிந்து கொண்டிடவேணும்-அதுவே உனக்கு

படிக்க உகந்த நல்ல நேரமாகும்


தம்பி நீயும்

படுக்கையிலே படுத்துக் கொண்டு

படிப்பதையே தவிர்த்திட வேண்டும்-மதியம்

சோம்பலான நேரத்திலும் படித்த

பாடங்களையே திருப்பிப் பார்க்க மறந்திடாதே!


தம்பி உனக்கு

எந்த இடத்தில் படிக்கவசதி?

மாடிப்படியா?

மரத்தடியா?

மொட்டைமாடியா?

தெருவிளக்கா?

காம்பவுண்டு சுவரா?

உனக்கு எது ?சரியென்று தேறும் இடத்தில்

ஊன்றி படித்திட வேண்டும்


தம்பி உனக்கு

எந்தபாடம் படிக்கவேணும்

அந்தபாடக் குறிப்பின் ஒருமித்த வாசிப்பு

அவசியம் பாடத்தை நினைவினில் கொள்ளவே

இந்த பாடத்தில் என்ன? தெரிந்து கொள்ளபோகின்றாய்?

எந்தமாதிரியான கேள்விக்கு

இந்தபாடத்தில் விடைகிடைக்கும்?-என்ற

கேள்விதனை உன்னுள் கேட்டிடவே மறந்திடாதே?


தம்பி நீயும்!

மெதுவாக மெதுவாக-உனக்கு

வாசித்து கிடைத்த குறிப்புகளை-பொருள்

புரிகின்ற வரையினில் வாசித்துப்பார்!

புரியவில்லை என்றாலே

தயக்கமின்றி ஆசானைக் கேட்டுப்பார்!


தம்பி நீயும்

வாசித்த குறிப்பை உனது மனதினிலே

வளையவந்து எண்ணிப்பார்

நீ படித்த குறிப்புகளை

உன்மனக்கண் முன்னே தோன்றும்படி

உன் உள்மனதினில் நினைத்துப்பார்


தம்பி நீயும்

புதிய பாடங்களை படிக்குமுன்பே

பழைய பாடங்களை மீண்டும் மீண்டும்- நினைவினில்

பதிய திரும்ப திரும்ப படித்துப்பார்!


தம்பி உனது

வாசிப்பும், மனப்பாடம் செய்வதும்,மட்டும்

பாடங்களை உனது மனதினில் தங்கச் செய்யாது

பாடங்களை படிக்கபடிக்க - நீயும்

குறிப்பெடுத்திட வேண்டும்


மாணவத் தம்பிக்கு!


தம்பி என்றும்

தேர்வினில் விடைகளையே சரியாகவோ விரிவாகவோ

நேரத்தில் பங்கிடாத மாணவனும்-குடும்பத்தில்

சகோதர சகோதரியிடம் குடும்பச் சொத்தை,பொருளை-முறையே

சரியாக பங்கிடாத பங்காளியும் சுகவெற்றி

சரியான இலக்கினையே அடைவதில்லை


தம்பி என்றும்

தேர்வினில் உனது உன்கையெழுத்து மட்டுமல்ல

தேர்வு மதிப்பெண்னை மாற்றுவது-உனது உண்மை உழைப்பும்

தானடா! வாழ்வின் திசைவழிதனை மாற்றிவிடும்


தம்பி என்றும்

தேர்வினில் பக்கங்களை சரியாக அடுக்காத மாணவனும்

வாழ்வினில் எடுத்தபொருளினை எடுத்த இடந்தன்னில்-வைக்காத

வாழ்க்கைமுறை மானுடனும்

தோல்விதனை தழுவுவதிலிருந்து

யாராலும் தடுக்கமுடியாது


தம்பி என்றும்

வாழ்ந்த அனுபவத்தை பரிசீலிக்காத மனிதனும்

தேர்வினில் எல்லாப் பதிலையும் ஒருமுறை-சரி

பார்க்கத் தவறுகின்ற மாணவனும்-வெற்றிப்

பாதையிருந்து சிறிது விலகுவதற்கு

காரணமாவதை தவிர்த்திட முடியாது


மாணவத் தம்பிக்கு!


தம்பி- நீயும்

வாழ்வின் முக்கிய குறிக்கோள் என்னவென்று

நாளும் முதலில் முடிவுகொண்டால்--என்றும்

நமக்கு தொடரும் வெற்றியாகும் புரிந்திடுவாயே


தம்பி- நீயும்

உனக்கு என்ன பேசவரும் என்பதைவிட

உனக்கு முன்னால் பேசுபவர் கேள்விக்கு

என்ன பதில் பேசுவது என்பதை புரிந்துபேசிடுவாயே

தம்பி-என்றும்

படிக்கும்கலை ஒரு உன்னதக் கலையாகும்-அதையே

இடமறிந்து காலமறிந்து நேரமறிந்து தேர்வறிந்து

குறிப்பறிந்து இலக்கறிந்து தேர்ந்தெடுத் திடுவாயே


தம்பி- நீயும்

பாடந்தன்னை திரும்ப திரும்ப

படித்திடவே வேண்டுமடா

உனது ஞாபகங்கள் மேலோங்கிடவே-அதையே

நினைவுபடித்திட கற்றதையே எழுதிப்பார்த் திடுவதே-கற்றது

நினைவில் நிறுத்திடவே சிறந்த வழியாகுமே


தம்பி-உன்

கவனம் சிதறாமலே-கல்வி

கற்றது தோற்காமலே உயர்ந்தோங்கவே-தியான

முறையொன்றை கற்றுத் தேர்ந்திடுவாயே


தம்பி - நீயும்

தொடர்ந்து படிப்பதையே நிறுத்திடுவாயே

இடையினிலே ஒவ்வொருமணி நேரத்திற்கும்-பத்து நிமிடம்

ஓய்வு எடுத்து தொடர்ந்து படித்திடுவாயே


தம்பி - நீயும்

கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பாடத்தையுமே-அனுபவத்தை

கண்டு மற்றவையோடு கொண்ட தொடர்பினையே

ஒப்பிட்டு பார்த்து தொடர்ந்து படித்து வெற்றிதனை

என்றும் அடைந்துவிட வேண்டுமே


தம்பி- நீயும்

முன்னோர் கண்ட அனுபவத்தை புரிந்துகொள்வது

என்றும் வாழ்வின் அவசியம்

முந்தைய தேர்வின் வினாத்தாளினை சேகரிப்பது

இன்றைய தேர்விலே வெற்றிபெற அவசியம்

உலக பிரச்னைக்கு பேசித்தீர்ப்பது அவசியம்-படிப்பினிலே

அடிக்கடி கேட்கும் கேள்விக்கு பதில்சொல்ல கவனம் அவசியம்


தம்பி-உனது

நல்ல அனுபவத்தையும் கற்றகல்வி தனையும்-உன்

நண்பனிடம் கலந்து ஆலோசிக்க மறவாதே


தம்பி-எப்போதும்

தேர்வினை நினைத்து பயங்கொண்ட மாணவனும்

வாழ்வினை நினத்து பதட்டங்கொண்ட மானுடனும்-வெற்றியென்றும்

காண்பது என்பது பூமிதனில் அரிதாகும்


தம்பியென்றும்

படித்ததும் படிக்க வேண்டியதும்-உனது

பாடத்தின் மதிப்பீடே செய்கின்ற பழக்கம்தான்

பாடத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றியின் எல்லைக்

கோடுதனையும் தாண்டி விண்னையும் எட்டிவிடுமே


தம்பி

மாணவனின் தேர்வுக்கு முந்தைய

பாடத்தின் குறிப்புகளே வெற்றிபெற உதவிடுமே-சிறந்த

வாழ்வினிற்கு நல்ல ஞாபகங்கள் சுவர்க்கமாக்கும்


தம்பி-உனது

தேர்விற்கோ பாடக் குறிப்புகளை திருப்பவேணும்-மனித

வாழ்விற்கோ அனுபவங்களை புரட்டவேணும்


தம்பி நீயும்

வாழ்விற்கு தேவையான கடமைகளை

வாழ்வினிலே முறையாக எடுத்துவைக்கும்-ஒவ்வொரு

பாதைகளின் அடியினிலும் சரிபார்த்து சென்றிட வேணும்


தம்பி

தேர்வினில் மட்டுமல்ல

வாழ் நாள் முழுவதுமே

குறித்த இடத்திற்கு

குறித்த நேரத்திற்கு முன்பே

போகும் பழக்கம் ,எதையும்-என்றும்

வாழ்வினில் வெல்லும் திசை நோக்கிடுமே


தம்பி என்றும்

மாணவனின் கேள்வித்தாள்

தேர்விற்கு முன்னே வெளியானது-அறிந்தும்

கவனத்தை சிதறாமல் இருப்பதைப் போலவே-வாழ்வினில்

குறுக்கு வழிகளின்

குறுக்கீடின்றி வாழப்பழகிக் கொள்ளடா


தம்பி

தேர்வு மையத்தில் அய்ந்து நிமிடம் முன்னம்

தேர்வின் வெற்றியை நிச்சயிக்கும்

எந்த ஒரு செயலுக்கும் முன்னமே அவகாசமே-கொடுத்து

செயலிட்டால் எந்தசெயலிலுமே

செயலெல்லாமே வெற்றியாகும்


தம்பி

கேள்வித்தாளை கண்டவுடன் கொள்ளாதே பரபரப்பு-அட

விழிக்காதடா அரக்கபரக்க நிதானமாகவே-முதலிலே

தெரிந்தவற்றை தேர்ந்தெடுப்பாயே-சிறிது

அவகாசமெடுத்து அடியெடுத்தாலே

எந்த தேர்விலும் எந்த நாளிலும் எப்போதும்

வாழ்வினிலே தோல்வியுன்னை தொடர்ந்திடாட்தே


தம்பி-என்றும்

தேர்வுத்தாளில் அடித்தலும் திருத்தலும்-வாழ்க்கையை

வாழும் நாளிலும் உருட்டலும் புரட்டலும்

சிறப்பினை தந்துவிடாது


தம்பி

தேர்வினில் கோடிட்டு

காட்டாத கருத்துகளும் நல்ல

உதாரணங்கள் சொல்லாத

ஆசானும் நல்லமதிப்பு

பூமிதனில் பெறுவதில்லை


தம்பி- நீயும்

வினாத்தாள்களில் குறிப்புகளை எழுதுவது

அழகிய சிலையினில் எழுத்துக்களை

செதுக்குவது போன்றதாகுமே

Wednesday, May 13, 2009

கனவில் நீபறந்தால்!


நீமிதித்தால் உடனே தண்டித்துவிடுவது முள்ளாகும்-காதலாகி

நீபார்த்தால் உடனே துண்டித்துவிடுவது சொல்லாகும்-தினமும்

நீ நினைத்தால் உடனே கண்டித்துவிடுவது மனதாகும்-கனவில்

நீ பறந்தால் உடனே வெறுத்துவிடுவது உலகாகும்

Sunday, May 10, 2009

காதல்!


இமைகளின் இசையினிலே

கருவிழி நடனம் கண்களிலே-மோன

அமைதி இதழ்களில் புன்னகையே

அன்பாம் மொழியினில் பார்வையிலே-காதல்

தரும்சுகம் நெஞ்சினில் ஆயிரமே

ந்ட்பில் கூடுவோம்!


விண்ணில் தோன்றி விண்ணில் மறையும்


மின்னலை போலவே


கண்ணில் தோன்றி கண்ணில் மறையும்


காதலை காணவே- நெஞ்சில்


என்னில் தோன்றி என்னில் கரையும்


அன்பில் சேரவே-உறவில்


உன்னில் தோன்றி உன்னில் உறையும்


நட்பில் கூடுவோம்

Saturday, May 9, 2009

ஓம் என்பது பேரண்டத்தின் ஓசையடா!


ஓம் என்பது பேரண்டத்தின் ஓசையடா!

நாம் என்பது நம் உலகத்தினில்

நலம்பயக்கும் இயக்கமடா!

ஒன்றுபட்ட உறுதியான சமதர்ம

உரிமை இழக்காத பாதையிலே

உயர்ந்திடும் கோடிக்கரங்களிலே-சுதந்திரத்தை

அடகுவைக்காத உன்னதமான இலட்சியத்திலே

ஆண்டான் அடிமையில்லாத பொதுவுடைமை-காணும்

பூலோக சுவர்க்கத்தை உருவாக்கடா!

பொதுவுடைமை


அறிவை அறிவால் அறிந்தே

அறியும் பேரறிவு தன்னை

மார்க்ஸிய மெய்ஞானத்திலே

நாமெல்லாம் பிரிவின்றி

நில்லாமலே ஒன்றுபட்டே

இவ்வுலகம் பேரின்பம்

காணுகின்ற நற்கோலமே

பொதுவுடைமை பொற்காலமே

Friday, May 8, 2009

தோழமையே!


எள்ளுள எண்ணையாக

கரும்பில் இனிப்பாக

மலருள் மணமாக

உடலுள் உயிராக-

நட்பாய் துணையாய் இருப்பவளே

நாள்தோறும் என்வாழ்வின்

நலமாய் வருபவளே-என்னுயிரினும் இனிய

தோழியே என்பிரிய காதலியே-எனக்கு

தோள்கொடுக்கும் தோழமையே!

மக்கள் ஜனநாயகமே!


தானென்ற ஆணவத்தையும்

தனதென்ற தாண்டவத்தையும்


தனியுடைமைக் கொள்கைகளும்


தன்னலத்தால் ஆக்ரமிப்பையும்

இனவெறியால் படுகொலையையும்,-காலனி ஆதிக்க

அடிமையாக்க ஆளாய்பறக்கும்

அதிகார ரத்தவெறித்தனத்தையும்-சுரண்டிக் கொழுத்த

பாசிச பெருமுதலாளித்துவத்தையும்


தவிடுபொடி ஆக்கிவிட வேணுமே-மெய்ஞானமாம்


ஏனென்ற கேள்விக்கு


சமத்துவமே விடையாவது ,மானுடமே !உன்கையிலே


ஒற்றுமையில் அணிவகுக்கும் மக்கள்ஜன நாயகமே !

வசந்தகாலமே!
நானவளாய் காண்பதெல்லாம்


காதல்விழியால் அறிந்தே- நெஞ்சில்


தேனான இனிப்பாகியே-அவளே


நானாக ஆகிடும் அன்பே வசந்தகாலமே

ஒற்றுமையில்!


எவரெவர் எவ்வாறு கண்டாரோ?

அவரவருக்கு அவராகவே காணுமுலகினிலே

நானென்பது போகட்டுமே

நாமென்பது ஆகட்டுமே

நானாரோ? நீயாரோ?-என்பதெல்லாமே

நானென்பதும் நீயென்பதும் கடந்து நின்று

நாமென்பதாய் ஆகிடவே பேரின்பமே

ஒற்றுமையில் உலகம் ஒருமுகமானாலே

உயர்வொன்று தானே தாழ்வென்பதில்லையே

Wednesday, May 6, 2009

மெய்க்காதலே!


என்னை நானறியேன் உன்னை நீயறியாய்

என்னை நானறிந்தால் உன்னை நீயறிந்தால்

நம்மை நாமறிந்தால் நம்மை நாடறியும்-காதல்

அன்பில் ஒளிவீசும் பேரின்பமே-அது

என்னாளுமே மெய்க்காதலாய்

என்றும் நிலைப்பதுவே பொற்காலமே

காசின்றி வாக்காளரில்லை!


காசில்லை என்றாலே உலகும் சொந்தமில்லை

நோட்டில்லை என்றாலே ஊரும் பந்தமில்லை-பொருளா

தாரமில்லை என்றாலே உற்றார் உறவுமில்லை-பணந்

தானே இல்லை என்றாலே எதுவுமில்லை இல்லை இல்லை-சல்லிக்

காசில்லை என்றாலே தாயுமில்லை தந்தையில்லை-ஒரு

காசுமில்லை என்றாலே மகனுமில்லை மகளுமில்லை-துண்டு

காசில்லை என்றாலே பிறவியுமில்லை வாழ்வுமில்லை-காசின்றி

காதலுமில்லை காதலனில்லை காதலியில்லை இன்பமுமில்லை-காசின்றி

வாக்குகளில்லை தேர்தலில்லை வேட்பாளரில்லை வாக்காளரில்லை-காசின்றி நாட்டோரில்லை ஆட்சியில்லை அரசியலில்லை

Sunday, May 3, 2009

நாணமோ?

நிலவொளிமுன் தலைகவிழ்ந்தாயோ?
தெருவிளக்கே தெருவிளக்கே நாணமோ?-

சூரியகாந்தியே!


காலையிலே வீரமாக இருந்தவளே சூரியகாந்தியே-க்விழ்ந்தே நீயும்

மாலையிலே ஏனடி நாணத்திலே பூத்து நின்றாயே- நீயும்
சோலையிலே யாருக்காக ஏங்கி காத்து நின்றாயே

லஞ்சம்!


அமர்ந்துகொண்டு கேட்கின்ற

அதிகார பிச்சையே லஞ்சமடா

அன்னத்திற்கு பிச்சையென்றாலே-வறுமைக்காக

அதைக்கூட மன்னிக்கலாம்-ஆடம்பரத்திற்க்காகவே

லஞ்சபிச்சைதனையே தண்டிக்காமல் விடலாமா?

மழையே!


முதன்முதலாக காதல்கோலம் போடவந்தாளே

என்காதலியே!-அதனாலே

மழையே மழையே நந்தியைப்போலவே

குறுக்கே வந்தே நுழையாதே

இன்றுமட்டும் நீயும் பொழியாதே

Saturday, May 2, 2009

பாவனை

பேருந்துவிற்கு நன்றி-அது
நிறுத்தாமல் போனதற்காக-காதலி என்னுடன்
பாராதது போலவே அவள் செய்யும்
பாவனை எனக்குப் பிடிக்கிறது

Friday, May 1, 2009

காதலி நீயே!


ஓ அந்தபட்டுப் பூச்சியே

ஒருமெட்டெடுத்து பாடிவந்ததோ?-காதலி உன்

விரல் நுனியினிலே தேனெடுத்து உண்ணவந்ததோ?-காதலி நீயே

அளவுக்கு மிஞ்சினாலே நஞ்சில்லையே

ஓ அந்த நட்சத்திர மண்டலமே

இயற்கை வார்த்த தொங்கும் தோட்டமோ?-அது

உந்தன் கண்ணில் மின்னும் பார்வைகளோ?