Popular Posts

Saturday, May 16, 2009

மாணவத் தம்பிக்கு!


தம்பி- நீயும்

வாழ்வின் முக்கிய குறிக்கோள் என்னவென்று

நாளும் முதலில் முடிவுகொண்டால்--என்றும்

நமக்கு தொடரும் வெற்றியாகும் புரிந்திடுவாயே


தம்பி- நீயும்

உனக்கு என்ன பேசவரும் என்பதைவிட

உனக்கு முன்னால் பேசுபவர் கேள்விக்கு

என்ன பதில் பேசுவது என்பதை புரிந்துபேசிடுவாயே

தம்பி-என்றும்

படிக்கும்கலை ஒரு உன்னதக் கலையாகும்-அதையே

இடமறிந்து காலமறிந்து நேரமறிந்து தேர்வறிந்து

குறிப்பறிந்து இலக்கறிந்து தேர்ந்தெடுத் திடுவாயே


தம்பி- நீயும்

பாடந்தன்னை திரும்ப திரும்ப

படித்திடவே வேண்டுமடா

உனது ஞாபகங்கள் மேலோங்கிடவே-அதையே

நினைவுபடித்திட கற்றதையே எழுதிப்பார்த் திடுவதே-கற்றது

நினைவில் நிறுத்திடவே சிறந்த வழியாகுமே


தம்பி-உன்

கவனம் சிதறாமலே-கல்வி

கற்றது தோற்காமலே உயர்ந்தோங்கவே-தியான

முறையொன்றை கற்றுத் தேர்ந்திடுவாயே


தம்பி - நீயும்

தொடர்ந்து படிப்பதையே நிறுத்திடுவாயே

இடையினிலே ஒவ்வொருமணி நேரத்திற்கும்-பத்து நிமிடம்

ஓய்வு எடுத்து தொடர்ந்து படித்திடுவாயே


தம்பி - நீயும்

கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு பாடத்தையுமே-அனுபவத்தை

கண்டு மற்றவையோடு கொண்ட தொடர்பினையே

ஒப்பிட்டு பார்த்து தொடர்ந்து படித்து வெற்றிதனை

என்றும் அடைந்துவிட வேண்டுமே


தம்பி- நீயும்

முன்னோர் கண்ட அனுபவத்தை புரிந்துகொள்வது

என்றும் வாழ்வின் அவசியம்

முந்தைய தேர்வின் வினாத்தாளினை சேகரிப்பது

இன்றைய தேர்விலே வெற்றிபெற அவசியம்

உலக பிரச்னைக்கு பேசித்தீர்ப்பது அவசியம்-படிப்பினிலே

அடிக்கடி கேட்கும் கேள்விக்கு பதில்சொல்ல கவனம் அவசியம்


தம்பி-உனது

நல்ல அனுபவத்தையும் கற்றகல்வி தனையும்-உன்

நண்பனிடம் கலந்து ஆலோசிக்க மறவாதே


தம்பி-எப்போதும்

தேர்வினை நினைத்து பயங்கொண்ட மாணவனும்

வாழ்வினை நினத்து பதட்டங்கொண்ட மானுடனும்-வெற்றியென்றும்

காண்பது என்பது பூமிதனில் அரிதாகும்


தம்பியென்றும்

படித்ததும் படிக்க வேண்டியதும்-உனது

பாடத்தின் மதிப்பீடே செய்கின்ற பழக்கம்தான்

பாடத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றியின் எல்லைக்

கோடுதனையும் தாண்டி விண்னையும் எட்டிவிடுமே


தம்பி

மாணவனின் தேர்வுக்கு முந்தைய

பாடத்தின் குறிப்புகளே வெற்றிபெற உதவிடுமே-சிறந்த

வாழ்வினிற்கு நல்ல ஞாபகங்கள் சுவர்க்கமாக்கும்


தம்பி-உனது

தேர்விற்கோ பாடக் குறிப்புகளை திருப்பவேணும்-மனித

வாழ்விற்கோ அனுபவங்களை புரட்டவேணும்


தம்பி நீயும்

வாழ்விற்கு தேவையான கடமைகளை

வாழ்வினிலே முறையாக எடுத்துவைக்கும்-ஒவ்வொரு

பாதைகளின் அடியினிலும் சரிபார்த்து சென்றிட வேணும்


தம்பி

தேர்வினில் மட்டுமல்ல

வாழ் நாள் முழுவதுமே

குறித்த இடத்திற்கு

குறித்த நேரத்திற்கு முன்பே

போகும் பழக்கம் ,எதையும்-என்றும்

வாழ்வினில் வெல்லும் திசை நோக்கிடுமே


தம்பி என்றும்

மாணவனின் கேள்வித்தாள்

தேர்விற்கு முன்னே வெளியானது-அறிந்தும்

கவனத்தை சிதறாமல் இருப்பதைப் போலவே-வாழ்வினில்

குறுக்கு வழிகளின்

குறுக்கீடின்றி வாழப்பழகிக் கொள்ளடா


தம்பி

தேர்வு மையத்தில் அய்ந்து நிமிடம் முன்னம்

தேர்வின் வெற்றியை நிச்சயிக்கும்

எந்த ஒரு செயலுக்கும் முன்னமே அவகாசமே-கொடுத்து

செயலிட்டால் எந்தசெயலிலுமே

செயலெல்லாமே வெற்றியாகும்


தம்பி

கேள்வித்தாளை கண்டவுடன் கொள்ளாதே பரபரப்பு-அட

விழிக்காதடா அரக்கபரக்க நிதானமாகவே-முதலிலே

தெரிந்தவற்றை தேர்ந்தெடுப்பாயே-சிறிது

அவகாசமெடுத்து அடியெடுத்தாலே

எந்த தேர்விலும் எந்த நாளிலும் எப்போதும்

வாழ்வினிலே தோல்வியுன்னை தொடர்ந்திடாட்தே


தம்பி-என்றும்

தேர்வுத்தாளில் அடித்தலும் திருத்தலும்-வாழ்க்கையை

வாழும் நாளிலும் உருட்டலும் புரட்டலும்

சிறப்பினை தந்துவிடாது


தம்பி

தேர்வினில் கோடிட்டு

காட்டாத கருத்துகளும் நல்ல

உதாரணங்கள் சொல்லாத

ஆசானும் நல்லமதிப்பு

பூமிதனில் பெறுவதில்லை


தம்பி- நீயும்

வினாத்தாள்களில் குறிப்புகளை எழுதுவது

அழகிய சிலையினில் எழுத்துக்களை

செதுக்குவது போன்றதாகுமே









No comments: