Popular Posts

Saturday, July 31, 2010

தமிழ்பாலர்நண்பர்கள் தினம்.. உயிர் காப்பான் தோழன் உள்ளத்தையும் காப்பான் தோழன் -உலகினில் எதையும் காப்பான் தோழன்

நண்பர்கள் தினம்..
உயிர் காப்பான் தோழன்
உள்ளத்தையும் காப்பான் தோழன் -உலகினில்
எதையும் காப்பான் தோழன் நட்புக்காக- நல்லது
எதையும் செய்வான் தோழன்
தாயுடன் பேசமுடியாத
தந்தையுடன் பகிரமுடியாத-
தாரத்துடன் கலந்துரையாடமுடியாத-சுற்றத்
தாருடன் மொழியமுடியாத -எதையும் எந்தவித
மான ரகசியங்களையும் ப்கிர்ந்திடும் நட்பாகுமே!

நண்பர்களைப் போல அருமையானவர் எவரும் இல்லையடா- நல்ல
நட்பு நம்மையும் காத்து நம் நாட்டையும் காக்கும் இலக்காகுமடா!
நல்லறிவு உடையார் நட்பு வளரும் வெண்ணிலவாகுமடா!
நல்ல நூல்கள் படிக்க படிக்க இன்பமாகுமடா!
நல்லபண்புடையாரின் நட்போ! பழகப் பழக இனிமையாகுமடா!
நல்ல நட்பு மகிழ்ந்துவாழ மட்டும் அல்லடா!
நண்பர்கள் வழிமாறும்போது திருத்தாத தோழமை உண்மைத் தோழமை இல்லையடா!
நண்பருக்குள் ஒத்த மன உணர்வே உயர்வாக்குமடா!
நண்பரின் பழக்கமும் அணுகுமுறையும் இரண்டாம் பட்சமடா!
நட்புக்கு முகமலர்ச்சி தேவையில்லையே!
நட்புக்கு உளமலர்ச்சியே அவசியமாகுமடா!
நட்புக்குத் துன்பமும் ஒன்றுதானடா!
நட்புக்கு இன்பமும் ஒன்றுதானடா!
நட்பே இன்பத்தைக் கொடுத்து சிரிக்குமடா!
நட்பே துன்பத்தில் சேர்ந்து துயரத்திலும் பங்கெடுத்து தோள்கொடுக்கும் தோழமை ஆகுமடா!
நட்பே மானத்தை மறைக்கும் ஆடை நழுவும்போதினில் ஓடும் கரங்களைபோலவே!
நண்பனின் துன்பத்தையே துடைதிட ஓடிடும் தோழமையடா!
நட்பே தன்னால் முடிந்த அளவு உதவிசெய்திடவே ஓடுமடா!
நட்பே தன்னையே கொடுத்து தன் நண்பனையே தாங்குமடா!
நட்பே உதட்டளவு புகழ்ச்சியிலே உயராதடா!
நட்பே உள்ளத்தளவு ஒருசின்ன அன்பு உவகையிலே !உண்மைத் தோழமையாகுமடா!








.

.

.




.

Sunday, July 25, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்!உன் பகுத்தறிவாலே! உனை உயர்ந்துவது உந்தன் சிந்தனை ஒன்று தானடா!

ஓ! ஓ! மனிதனே! உன் பகுத்தறிவாலே!
உனை உயர்ந்துவது உந்தன் சிந்தனை ஒன்று தானடா!உனது
உழைப்பும் திறமையும் ஒன்றுசேர்ந்த இடத்திலே வெற்றிக்குப் பஞ்சமில்லையடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்!ஒரே ஒருசாதி தானடா! உலகத்திலே!

ஒரே ஒருசாதி தானடா! உலகத்திலே!-உன்
முன்னே இருந்து முகஸ்துதி செய்பவனும் -உன்
பின்னே இருந்து தூண்டி விடுபவனும்
ஒரே ஒருசாதி தானடா! உலகத்திலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்! நிதானமான எந்த செயலும் வெற்றி நோக்கிய பயணத்தின் மைல்கல்லாகுமடா!

வேகமான முடிவுகள் எல்லாமே! உறுதியானவை இல்லை இல்லையடா!
நிதானமான எந்த செயலும் வெற்றி நோக்கிய பயணத்தின் மைல்கல்லாகுமடா!
அமைதியான சிந்தனைகொண்டு செய்யும் செயலெல்லாம் உயர்வாகுமடா!
அவசரமான செயலகள் எல்லாமே தோல்வியின் கதவினையே தட்டுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்! ஓயாத தள்ளாட்டம் ஏதுக்கடா?- நீயும் ஒருமுறை வீழ்ந்தாகிலும் விழுந்து எழுவது மேலாகுமடா!

ஓயாத தள்ளாட்டம் ஏதுக்கடா?- நீயும்
ஒருமுறை வீழ்ந்தாகிலும் விழுந்து எழுவது மேலாகுமடா!
கோழையாக தினம் செத்துசெத்து பிழைப்பதைவிட - நீயும்
துணிச்சலாக நிமிர்ந்து வாழ்வது உத்தமமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்! மனசுவிட்டு பேசுவதைவிட சிறந்த அனுபவ அறிவு வேறுஇல்லையடா!

வேறுஇல்லையடா!வேறுஇல்லையடா!-இந்த உலகத்திலே
வேறுஇல்லையடா ! மனசுவிட்டு பேசுவதைவிட சிறந்த அனுபவ அறிவு
வேறுஇல்லையடா!
மனசுவிட்டு பேசாத காதல் கரைசேர்வது இல்லையடா!
மனசுவிட்டு பேசாத நாடும் சமாதானம் கொள்வதில்லையடா!
மனசுவிட்டு பேசாத அரசியலும் உண்மையை உயர்த்துவதில்லையடா!
மனசுவிட்டு பேசாத எதுவும் எப்போதும் உயர்வினை அடைவதில்லையடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்!வீழ்ச்சியிலே வீழ்ச்சியிலே கலக்கமும் கூடாதடா! எழுச்சியிலே எழுச்சியிலே மயக்கமும் ஆகாதடா!

வீழ்ச்சியிலே வீழ்ச்சியிலே கலக்கமும் கூடாதடா!
எழுச்சியிலே எழுச்சியிலே மயக்கமும் ஆகாதடா!
புகழ்ச்சியிலே புகழ்ச்சியிலே சந்தோசமும் கூடாதடா!
இகழ்ச்சியிலே இகழ்ச்சியிலே வேதனையும் கூடாதடா1

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்!எதிர்பாராதே எதையும் நீ எவரிடத்தும் எதிர்பாராதே!

எதிர்பாராதே எதையும் நீ எவரிடத்தும் எதிர்பாராதே!-எதையும் நீயே
எவரிடத்தும் எதிர்பார்த்தாலோ!உன்வாழ் நாளிலே நீயும்
எதையுமே சாதிக்காமல் வெற்றுத்தாளாய் ஆகிடுவாய் புரிந்துகொள்ளடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்!அதுவும் நடக்கும்,இதுவும் நடக்கும்,-அட எதுவும் நடக்கும் உலகத்திலே - நீயும் எதையும் சந்திக்க தயாராய் இரு!

இந்த உலகத்திலே!
வாழும் வாழ்க்கையிலே!
அதையும் எதிர்பாரு!இதையும் எதிர்பாரு!எதையும் எதிர்பாரு!
எதிர்பாரு! எதிர்பாரு! நீ எப்போதுமே!-எதையும் நீ எதிர்பாரு!
வாழும் வாழ்க்கையிலே
எதிர்பாராததையும் எதிர்பாரு!அதுவும் நடக்கும்,இதுவும் நடக்கும்,-அட
எதுவும் நடக்கும் உலகத்திலே - நீயும்
எதையும் சந்திக்க தயாராய் இரு!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஒற்றுமையோடு நாட்டினில் உயர்ந்திடும் நடப்புவேணும்!

வயசுல இளைஞனா இருந்துடவேணும்!-அனுபவத்துல
அறிவுல கிழவனா இருந்துடவேணும் !
அன்புல குழந்தையா இருந்துடவேணும்!- நடக்கும்
பண்புல அறிஞனா வாழ்ந்துடவேணும்!-பகுத்தறிவோடு
வாழ்ந்திடும் நல்லெண்ணம் வேணும்!-ஒற்றுமையோடு
நாட்டினில் உயர்ந்திடும் நடப்புவேணும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காலமறிந்து புரட்சி செய்திடவேணும் மார்க்சீய தத்துவமறிந்து அரசமைந்திடவேணும்!

நாளை அறிந்து பயணம் செய்திடவேணும்
வேளை அறிந்து பேசிடவேணும்
காலமறிந்து புரட்சி செய்திடவேணும்
மார்க்சீய தத்துவமறிந்து அரசமைந்திடவேணும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/குளிர்காற்றே!குளிர்காற்றே! என்னை நீயும் கொல்லாதே!கொல்லாதே! மூடிய சன்னலையே முத்தமிட்டுப் பேசியே பேசியே!

குளிர்காற்றே!குளிர்காற்றே! என்னை நீயும் கொல்லாதே!கொல்லாதே!
மூடிய சன்னலையே முத்தமிட்டுப் பேசியே பேசியே! என்னை நீயும் கொல்லாதே!காதலனுக்காகவே
காதலின் விரசத்தில் காத்திருக்கும் அன்புக்காதலியாம் என்னை நீயும் கொல்லாதே!கொல்லாதே!
குளிர்காற்றே!குளிர்காற்றே! என்னை நீயும் கொல்லாதே!கொல்லாதே!
மூடிய சன்னலையே முத்தமிட்டுப் பேசியே பேசியே! என்னை நீயும் கொல்லாதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வாச மலர்களும் நேச மனிதர்களும் எந்த காலத்திற்கும் சொந்தமடா!

வாச
மலர்களும் நேச மனிதர்களும்
எந்த காலத்திற்கும் சொந்தமடா!
தொலைவினில் தொலைவினில் கேட்குது கேட்குது குயில்பாட்டு!- நெஞ்சமோ
மகிழ்ந்திடும் மகிழ்ந்திடும் தினம் தினம் அந்ததேனிசை கேட்டு!
வாச
மலர்களும் நேச மனிதர்களும்
எந்த காலத்திற்கும் சொந்தமடா!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /நாளெல்லாம் நாணலே தன் தலையாட்டி நதியலைகளுக்கு நன்றிசொல்வது போலவே!

நாளெல்லாம் நாணலே தன் தலையாட்டி
நதியலைகளுக்கு நன்றிசொல்வது போலவே!
நீ ஒரு அழகிய லில்லிப்பூவே
நீர்வார்த்த கைகளுக்கு நன்றிசொல்லும்
நீ ஒரு அழகிய லில்லிப்பூவே!
நன்றி மறந்திடவேண்டாம் என்று
நாளெல்லாம் நாணலே தன் தலையாட்டி
நதியலைகளுக்கு நன்றிசொல்வது போலவே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /தன் இருப்பிடத்திலேயே உலகினையே கண்டுகொள்ள அறிவியலின் துணைகொண்டு,பகுத்தறிவினாலே! தனியொருவழி கண்டு மெய்யறிவினை உணரவைத்தாய்

கணிப்பொறியே! கணிப்பொறியே!
தனியறைக்கு உள்ளே தன்னையே கண்டுபிடித்தவனையே
தனிமைச் சிறையினில் வைத்தாயோ? கணிப்பொறியே!-இல்லை
தன் இருப்பிடத்திலேயே உலகினையே கண்டுகொள்ள அறிவியலின் துணைகொண்டு,பகுத்தறிவினாலே!
தனியொருவழி கண்டு மெய்யறிவினை உணரவைத்தாயோ? கணிப்பொறியே!
கணிப்பொறியே! கணிப்பொறியே!
தனியறைக்கு உள்ளே தன்னையே கண்டுபிடித்தவனையே
தனிமைச் சிறையினில் வைத்தாயோ? கணிப்பொறியே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /காற்றுப் பெண்ணே நீயும் தூசிகளையே துரத்தினாலும் பரவாயில்லையே! பாவம் சருகுகளே!படும்பாடு தாங்க முடியவில்லையே!

நீயும்
நில்லடி நில்லடி காற்றுப் பெண்ணே!
நீயும் துரத்தியது போதுமடி!
பாவம் சருகுகளே!படும்பாடு தாங்க முடியவில்லையே!காற்றுப் பெண்ணே நீயும்
தூசிகளையே துரத்தினாலும் பரவாயில்லையே!
பாவம் சருகுகளே!படும்பாடு தாங்க முடியவில்லையே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /அன்பென்னும் அணுவுள்ளே அமைந்த காதலன்பே! அன்பென்னும் பண்புருவம் காதலமுதே!

அன்பென்னும் அணுவுள்ளே அமைந்த காதலன்பே!
அன்பென்னும் பண்புருவம் காதலமுதே!
அன்பென்னும் பிடியினில் அகப்படும் கலையே!
அன்பென்னும் வீடுவந்த உள்ளமே!
அன்பென்னும் வலையினில் அகப்பட்ட மீனே!
அன்பென்னும் கரத்தினில் இனிக்கும் அமுதே!
அன்பென்னும் உள்ளத்தில் அடங்கிடும் கடலே!
அன்பென்னும் உயிரினில் ஒளிர்ந்திடும் அறிவே!
அன்பென்னும் அணுவுள்ளே அமைந்த காதலன்பே!
அன்பென்னும் பண்புருவம் காதலமுதே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /காதலன் எனைபார்க்கும் காதலின் அவசரத்திலே - காதலியோ!ஒருகண்ணுக்கு மைதீட்டி- மறு கண்ணுக்கு மைதீட்ட மறந்தாளோ?

காதலன் எனைபார்க்கும்
காதலின் அவசரத்திலே -
காதலியோ!ஒருகண்ணுக்கு மைதீட்டி- மறு
கண்ணுக்கு மைதீட்ட மறந்தாளோ?
காதலாலே!
காதலன் நானும் வாய்பேசா மெளனத்தில் சென்றதையே மோனவிரதம் நானும் கொண்டேன் என்று காதலி அவளும் எண்ணிக் கொள்வாளோ?
காதலி காதலன் எனைப்பார்த்து தன் துண்டையும் மாலையாய் போட்டாளோ?
காதலி காதலன் எனைக் காதலுற்றே பூவையே! பூவையே சந்தனமாக பூசினாளோ?காதலியோ!
காதலன் எனைபார்க்கும்
காதலின் அவசரத்திலே -
காதலியோ!ஒருகண்ணுக்கு மைதீட்டி- மறு
கண்ணுக்கு மைதீட்ட மறந்தாளோ?கடைக் கோடியிலே!
கடைக்கண் பார்வை தந்தது யாரென்று கேட்பாளோ? கதவோரமே!
காதலன் நானும் புன்முறுவல் பூத்துவிட்டு போனதையே எவரென்று பார்ப்போளோ?
காதலன் நானும் வாய்பேசா மெளனத்தில் சென்றதையே மோனவிரதம் நானும் கொண்டேன் என்று காதலி அவளும் எண்ணிக் கொள்வாளோ?

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /காதலி இவளோ! மாரீச மாய மானையும் பிடிப்பதற்கே ஆகாய சந்திரனில் மேயும் மானையும் தூதுவிடுவாளே!

என்னருமைக் காதலி இவளோ!
கோடிச் சங்குகளின் மத்தியிலே ஒரு வலம்புரிச் சங்கானவளே!-காதலி இவளோ!
மாரீச மாய மானையும் பிடிப்பதற்கே
ஆகாய சந்திரனில் மேயும் மானையும் தூதுவிடுவாளே!
முல்லைக் கொடியும் அரும்பிடவே -இவளோ!
மோகனப் புன்னகையே செய்திடுவாளே!-இவளின்
கண்ணிரண்டும் கெண்டை மீனாகுமே!செவ்
வாயோ! தொண்டைக் கனியாகுமே!வெண்பல்லோ தூயமுத்தாகுமே!
புருவமோ கவிழ்ந்த வானவில்லாகுமே!அவளின் பார்வையோ!என்னை
வஞ்சனை செய்து மனங்கவர்ந்ததே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /காதலன் எந்தன் நினைவே ! அவளின் உள்ளத்தில் ஊற்றாய் பெருக்கெடுத்து ஓடியதோ?

என்னருமைக் காதலியே ! பேரிளம்பெண்ணே!-கடலின்
மணற்பரப்பில் காமனின் உருவத்தையே தானெழுதிவிட்டு-காமனின்
தேரையும்,அவனின் மலரம்பையும்,கரும்புவிலலையும்
ஏன் தான் எழுதிட மறந்தாளோ?-அதை
எழுத நினைத்த போதினில் காதலன் எந்தன் நினைவே !
அவளின் உள்ளத்தில் ஊற்றாய் பெருக்கெடுத்து ஓடியதோ?

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /எனது காதல் நினைவையே காதல் தலைவன் அவன் ஏனோ?அவனின் நெஞ்சாலே இன்னும் அறியவில்லையே!

எனது காதல் நினைவையே காதல் தலைவன் அவன் ஏனோ?அவனின்
நெஞ்சாலே இன்னும் அறியவில்லையே!
பேரிளம்பெண் நானே!காதல் தலைவனையே!
கண்ணாலே முட்டினேன்-அன்பு
நெஞ்சாலே மோதினேன்!-எனது காதல் நினைவையே காதல் தலைவன் அவன் ஏனோ?அவனின்
நெஞ்சாலே இன்னும் அறியவில்லையே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் காதலன் அவனைத்தான் கண்டிடவே மனமின்றி எனது கண்ணும் எனக்கு பகையானதோ? எனது நெஞ்சும் எனக்கு எதிரானதோ?

காதலன்
அவனைத்தான் கண்டிடவே மனமின்றி
எனது கண்ணும் எனக்கு பகையானதோ?
எனது நெஞ்சும் எனக்கு எதிரானதோ?
கண்ணைமூடிக் கொண்டபோது கட்டிக்கொண்ட காதலனே!
கண் திறந்தபோது காதலனோ காணாமல்தான் போனானே!-காதலன்
அவனைத்தான் கண்டிடவே மனமின்றி
எனது கண்ணும் எனக்கு பகையானதோ?
எனது நெஞ்சும் எனக்கு எதிரானதோ?

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /காதலில் நாயம் பேசிடவே ! களத்தோரம் வந்தானே காதலன் வந்தானே!-அன்புக் காதலன் வந்தானே!

காதலன் வந்தானே!-அன்புக்
காதலன் வந்தானே!இன்பக்
காதலைத் தந்தானே-தந்தானே
காதலைத் தந்தானே
என்னையே அன்புக் கயிறாய் திரித்து,
அவன் கண்ணில் என்னையே காட்டி
அவன் நெஞ்சினில் என்னையே உருமாற்றி!
அவனையே எனக்குத் தந்து என்னையே அவனுக்குள் புகுத்தி!
என்ன என்ன மாயம் செய்திடவோ! இதழினில்
ஏதேது காயம் தந்திடவோ!மெய்யினில் பொய்யின்றி
காதலில் நாயம் பேசிடவே !
களத்தோரம் வந்தானே
காதலன் வந்தானே!-அன்புக்
காதலன் வந்தானே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /அடிசந்தனச் சேறும் அரைச்ச மஞ்சளும் அவனின் நெற்றிவிழியின் நீராகுமோ?

அடிசந்தனச் சேறும் அரைச்ச மஞ்சளும்
அவனின் நெற்றிவிழியின் நீராகுமோ?
அத்தானின் மலர்மார்பில் - நான் என்
ஆசையெல்லாம் வைத்தேனே!
பித்தான் இந்தப் பேரழகில்
அத்தானும் அசரமாட்டானோ?
அடிசந்தனச் சேறும் அரைச்ச மஞ்சளும்
அவனின் நெற்றிவிழியின் நீராகுமோ?
அத்தனை பூக்களும் வாசனை திரவியமும்-வாசமாம்
அவனின் காதல் சுவாசத்திற்கு ஈடாகுமோ?

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /நானும் கூடல் நகரக் குமரிப் பொண்ணு தானடா! குழையாத தென்றல் கொழுந்து நானடா!

நானும்
கூடல் நகரக் குமரிப் பொண்ணு தானடா!
குழையாத தென்றல் கொழுந்து நானடா!
அரைப்பார்வை பேசிவிட்டுத்தான் -மச்சான்
அந்தப் பக்கம் அப்புறமாத்தான் போனானாம்!
மன்மதனின் சேனை திரண்டது போலவே!அழகு
உருவம் கொண்ட அன்புப் பாவை எந்தன் முன்னே!
அரைப்பார்வை பேசிவிட்டுத்தான் -மச்சான்
அந்தப் பக்கம் அப்புறமாத்தான் போனானாம்!- நானும்
கூடல் நகரக் குமரிப் பொண்ணு தானடா!
குழையாத தென்றல் கொழுந்து நானடா!
காதல் சூடேற்றும் காமனும்கூட
அம்புவிட்டு அம்புவிட்டு கைசலித்து நின்னானாம்!மச்சான் அவனின்
குறைப்பார்வை எனைஎன்ன செய்யும் நானும் மார்தட்டி நிப்பேண்டா!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /எனது இளமைக்கே!எனது தனிமைக்கே!-அடியே! எனக்கே சோதனை வந்தாச்சு!-மங்கை எந்தன் தூக்கம் போயாச்சு

-மாமன்
அவனின் மயக்கும் பார்வையாலே !அவன் தந்த மன்மத மயக்கத்தாலே!
அவனின் மந்திரப் புன்னகையாலே! அவன் வந்த காதலின் கனவாலே!
ஆத்தாடி ஆத்தாடி இன்னைக்கு ராத்திரி -எனது இளமைக்கே!எனது தனிமைக்கே!-அடியே!
எனக்கே சோதனை வந்தாச்சு!-மங்கை
எந்தன் தூக்கம் போயாச்சு!-மாமன்
அவனின் மயக்கும் பார்வையாலே !அவன் தந்த மன்மத மயக்கத்தாலே!
அவனின் மந்திரப் புன்னகையாலே! அவன் வந்த காதலின் கனவாலே!
எனது இளமைக்கே!எனது தனிமைக்கே!-அடியே!
எனக்கே சோதனை வந்தாச்சு!-மங்கை
எந்தன் தூக்கம் போயாச்சு!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /மன்மதனே !மன்மதனே !தாமரைப் பூவினை கரும்புவில்லினில் வைத்து மலர் அம்புதனையே அந்தியிலே!விட்டானாம் மன்மதனே!

தலைவி
இவளோ! தன்னை மறந்தாளாம்? தன்வார்த்தை மறந்தாளாம்?
மன்மதனே !மன்மதனே !தாமரைப் பூவினை கரும்புவில்லினில் வைத்து
மலர் அம்புதனையே அந்தியிலே!விட்டானாம் மன்மதனே! மன்மதனே!தலைவி
இவளோ! தன்னை மறந்தாளாம்? தன்வார்த்தை மறந்தாளாம்?
இளமேனிக் கலை இழந்தாளாம்!தன் கைவளையும் பறிகொடுத்தாளாம்!
தன்னுடலும் சோர்ந்தாளாம்! தன் நினைவைத் துறந்தாளாம்
தலைவனின் நினைவினிலே தான்சேர்ந்து தனிமை விரட்டினாளாம்!
மன்மதனே !மன்மதனே !தாமரைப் பூவினை கரும்புவில்லினில் வைத்து
மலர் அம்புதனையே அந்தியிலே!விட்டானாம் மன்மதனே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /பாவையே பந்தடித்தாளே!பந்தடித்தாளே! கண்பார்வைப் பந்தடித்தாளே

பாவையே
பந்தடித்தாளே!பந்தடித்தாளே!
கண்பார்வைப் பந்தடித்தாளே!-பாவையே
பாவையே
பந்தடித்தாளே!பந்தடித்தாளே!
கண்பார்வைப் பந்தடித்தாளே

என்னில் எழுந்தும் என்னெஞ்சில் இருந்தும்
என்னிதயத்தையே இழைத்தும்
இளமேனிக் கொழுந்தாளே!
பாவையே
பந்தடித்தாளே!பந்தடித்தாளே!
கண்பார்வைப் பந்தடித்தாளே
காலம் வருந்தும் அன்புமேனிக் குழைந்தும்
காளை உளத்தும் கன்னி நுழைந்தும் ஒருமையில் நின்றும் கண்ணால் சுழன்றும்
பாவையே
பந்தடித்தாளே!பந்தடித்தாளே!
கண்பார்வைப் பந்தடித்தாளே!
தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம் /

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உந்தன் கையினிலே! வெண்பட்டுகொண்டு வெண்ணிலா ஊசியினாலே மன்மதன் தைத்த பந்தொன்றும் உள்ளதடி!

உந்தன் கையினிலே! வெண்பட்டுகொண்டு வெண்ணிலா ஊசியினாலே மன்மதன் தைத்த
பந்தொன்றும் உள்ளதடி!
மங்கையே -அமுத
நங்கையே
மன்மதன் ஆட்சி நடத்த தகுந்தவளே!மலரம்பையும் தாண்டி கரும்புவில்லையும் அசைத்து
சிந்தை உருகவே! சிலையும் பேசவே!
தேனொழுகும் செந்தேனிதழ் சொல்லாளே!
உந்தன் கையினிலே! வெண்பட்டுகொண்டு வெண்ணிலா ஊசியினாலே மன்மதன் தைத்த
பந்தொன்றும் உள்ளதடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அது நெஞ்சாழ நிறுத்திய ஓவியமன்றோ!அதையே! காதலென்றால் அதுவும் மிகையாகுமோ!

தையோ! என்பதும் ஏதோ ஒன்று என்பதும்
கண்ணாலே எழுதிய காவியமன்றோ!-அது
நெஞ்சாழ நிறுத்திய ஓவியமன்றோ!அதையே!
காதலென்றால் அதுவும் மிகையாகுமோ!
காதலி அவளின் இதழோ! எதையோ?சொல்லிட விழைந்ததே!
காதலி அவளின் விரல்களோ! ஏதோ ஒன்றினைக் காட்டிடவே !விரல்களாலே காதலிசைதனையே!யாழின்றி வீணையின்றி அங்கும் இங்கும் செம்மொழித் தமிழாலே!அமுதினையே!
மீட்டிட அலைந்ததே!
எதையோ! என்பதும் ஏதோ ஒன்று என்பதும்
கண்ணாலே எழுதிய காவியமன்றோ!-அது
நெஞ்சாழ நிறுத்திய ஓவியமன்றோ!அதையே!
காதலென்றால் அதுவும் மிகையாகுமோ!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்நல்லதமிழ் பாட்டு பாடவே நீயும் கேட்டு- நாமே நாளெல்லாம் சந்தோசம் கொண்டாடுவோமே!

நீயும்
கானாற்றில் அரும்பிய கரும்பே!இள அன்னமே!
ஏணிப்பருவத்து செந்தேனே!- நானும் காதல்மலர்
நானூற்றிலே சுற்றும் வண்டே!
நாள்தோறும் உன்னை நான் கண்டே! அன்புத்தேன் உண்டே!நானே
நல்லதமிழ் பாட்டு பாடவே நீயும் கேட்டு- நாமே
நாளெல்லாம் சந்தோசம் கொண்டாடுவோமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் வினோதினியே! கன்னி செளந்திரியமே! கற்பனைக்கு கிட்டாத பிரபஞ்சமே !

காதல் வினோதினியே! கன்னி செளந்திரியமே!
கற்பனைக்கு கிட்டாத பிரபஞ்சமே ! அந்திவந்த மலர்மஞ்சமே!
காதல் குளிகையே! அமுத லகரியே!மனோகர சஞ்சாரியே!அலங்
காரவிபூதியே!வசீகர சஞ்சீவியே!சோபன பண்டாரியாம் பொக்கிஷமே!
காமவேதம் பறித்த கண்ணினாளே!மங்கையாளே!ஆகாய கங்கையாளே!
கார்த்திகையாளே! காதல் வினோதினியே! கன்னி செளந்திரியமே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/காதல் உரிமை உலகினில் வென்றிடவே உவகையே கொள்வாளாம்!

காதல் தலைவனைப் பார்த்தாளாம்!
காதல் தலைவியும் பசந்தாளாம்!காதல் பேரின்பத்தையே!
கண்ணில் கண்டாளாம்! கருத்தில் பறந்தாளாம்!கூடல் நினைப்பினிலே!
கனவில் பயந்தாளாம்! காலம் மறந்தாளாம்!- நம்மாழ்வாரின்
கவிதை நடையாக ! கனிவாய் நடப்பாளாம்!ஊடல் உறவினிலே
உண்மைக் களவினில் உணர்வின் எல்லையிலே! காதல் உரிமை
உலகினில் வென்றிடவே உவகையே கொள்வாளாம்!

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/அந்த மடந்தையும் பாடிட விழைந்தாளே!

அந்த மடந்தையும் பாடிட விழைந்தாளே!
எந்த இசையையும் வென்றிடும் செந்தமிழாளே!

செண்பக முகத்தாளே! வள்ளைக்கொடி காதாளே!
செங்காந்தள் விரலாளே! யாழ்வீணை முன்கையாளே!-பச்சை இள நீர்ப்
பனை நெஞ்சாளே!வரால் கணைக் காலாளே! நண்டு முழங்காலாளே!
வாவிமலர்த் தாளாளே!-அந்த மடந்தையும் பாடிட விழைந்தாளே!

Friday, July 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/கூடிப்பார்த்தேன் கூடிப்பார்த்தேன் ஒன்றுபட்டு கூடிப்பார்த்தேன் இந்தமண்ணும் மண்ணும் பொதுவுடைமைப் பொன்னாய் ஆகிவிட்டதே

மோதிப்பார்த்தேன் மோதிப்பார்த்தேன் முயற்சியுடனே
மோதிப்பார்த்தேன் -தனியுடைமை
மலைகளும் மலைகளும்மண் துகள்களானதே! !
தேடிப்பார்த்தேன் தேடிப்பார்த்தேன் தேடலுடனே
தேடிப்பார்த்தேன் வானமும் வானமும் என்வசமானதே!
கூடிப்பார்த்தேன் கூடிப்பார்த்தேன் ஒன்றுபட்டு
கூடிப்பார்த்தேன் இந்தமண்ணும் மண்ணும் பொதுவுடைமைப் பொன்னாய் ஆகிவிட்டதே!
வாழ்ந்துப்பார்த்தேன் !வாழ்ந்துப்பார்த்தேன் நம்பிக்கையுடன்
வாழ்ந்துப்பார்த்தேன் வாழ்க்கை வாழ்க்கை வசந்தமானதே! !!!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ தமிழில் ஒருவார்த்தையே இல்லையன்றோ!

என்னருமைக் காதலியே!
உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு
நொடியும் வலிக்கின்றதே!- எந்த காலமும் எந்த
நேரமும் உன் நினைவுகள் மட்டும் தோன்றுகின்றதே!எனதினிமைத் தோழியே!
உன்னை மறந்துவிட்டேன் என்று நெருங்கிய
தோழமைகளிடமே பொய்யுரைத்தேனே!எத்தனைப் பொய்யுரைத்த போதிலும் எந்தன் மனதில்
உன்னை மட்டுமே நினைக்கும் அன்புத்துன்ப வேதனையையே!
மறந்திடும் வழிமுறை நானே அறியேனே!என் துணையின் துணையே!
அந்த காதலின்பத்தினையே - நானே உனக்குரைத்திடவே!
தமிழில் ஒருவார்த்தையே இல்லையன்றோ!

Wednesday, July 7, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை’?தேவாரப் பாகிருக்கு!-எம்தமிழாம் செம்மொழியிலே! திருவாசகத் தேனிருக்கு!

தேவாரப் பாகிருக்கு!-எம்தமிழாம் செம்மொழியிலே!
திருவாசகத் தேனிருக்கு!எம்தாய்மொழியாம் செம்மொழியிலே!
நாவார உண்ண என்ன உனக்குக் கஷ்டமா?- நீயும்
நல்லதமிழ் படிக்க என்ன வருத்தமா?

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை’?மல்லிகைமலர் மலர்ந்த மாலை!

மல்லிகைமலர் மலர்ந்த மாலை!-என்றும் எப்போதும்
மணமது வீசுகின்ற சோலை!

முல்லைப் பூத்த வேளை-இருவாட்சி பூவே
மொட்டவிழ்ந்த வசந்த காலம்!-இது
மல்லிகைமலர் மலர்ந்த மாலை!-என்றும் எப்போதும்
மணமது வீசுகின்ற சோலை!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை’?/காதல் அலைமேலே அலையாக அலைமோதுதே!

காதல் அலைமேலே அலையாக அலைமோதுதே!-அன்பு
வான்மழையாகி அழகான முத்தினையே அள்ளிஅள்ளிக் கொட்டுகின்றதே!
கண்ணாலே கதைபேசி நெஞ்சாலே நிலைகொண்டு காதலின்பம்
மண்ணாளும் வித்தைதனையே தினதோறும் சொல்கின்றதே!
என்னாளும் நமதாக இனியமொழியாகி சித்திரமாய் பேசுகின்றதே!
அன்பாலே உயிரினில் கலந்து உள்ளத்தை ஆளும் தத்துவமானதே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/- வண்ணத்துப் பூச்சியின் பின்னே நீயும் போகாமலே தனிமையிலே தவமென்னவோ?

காதலியே ! எனது அன்புத் தலைவியே!
வரைந்த வாகான சித்திரமாகவே! -அழகிய
வண்ணத்துப் பூச்சியும் சுற்றுதடி!- தலைவன் நான்
வாராமலே எங்கும் போகமனம் இல்லாமலே!- வண்ணத்துப் பூச்சியின் பின்னே நீயும்
போகாமலே தனிமையிலே தவமென்னவோ?

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-உனக்காகவே நான் காத்துக் கிடந்தசுகம் உன்னூடலே!

தேனும் திணைமாவும் உன்னிதழே!என்காதலியே!
தித்திக்கும் முக்கனியும் உனதுபார்வையே!என் துணையே!
கானக்கு யிலிசையும் உன்பாடலே!-உனக்காகவே நான்
காத்துக் கிடந்தசுகம் உன்னூடலே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/வாழ்க்கையிது வாழ்க்கையடா! உடலோடு உடல்சேரும் உடற்புணர்ச்சி மட்டுமல்ல!

வாழ்க்கையிது வாழ்க்கையடா!
உடலோடு உடல்சேரும் உடற்புணர்ச்சி மட்டுமல்ல!
வாழ்க்கையிது வாழ்க்கையடா!-உயிரும் உடற்புணர்வினில் மட்டும்
சேர்ந்து நிறைவும் கொள்வது இல்லையடா!
வாழ்வினில் மனப்புணர்ச்சியிலும் அதன்மூலம் உயிர்
வாழ்த்தும் உயிர்ப்புணர்ச்சியிலும் ஒன்றுபடுவதே வெற்றிகாணும்
காதலின்ப மயமான வாழ்க்கையடா!
வாழ்வினில் உடற்புணர்ச்சியே படிப்படியாகவே குறைந்து உயிர்
வாழ்வின் புணர்ச்சியாகி முடிவினில் அகமே முழுவதுமாகுமே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/காதல் மென்மையானது!

காதல் மென்மையானது!
காதல் உண்மையானது!
காதல் திண்மையானது!
காதல் நுன்மையானது!

காதல் மென்மையானது!
கண்ணுக்குத் தெரியாத அணுக்களினாலே!
தாக்கும் மூச்சுக் காற்றினைவிட!
காதல் மென்மையானது!
ஆதவனின் ஒளிக்கதிரினாலே கனலாக்கும் கண்ணின்
பார்வையைவிட
காதல் மென்மையானது!
காதல் உண்மையானது!
காதல் திண்மையானது!
காதல் நுன்மையானது!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-காதலில் ஊடலும் வேண்டுமடி! கூடலும் வேண்டுமடி!

காதலி தருகின்ற அமுத மழையாம் !
காதலின்பத்தையே!முழுமையாகவே !சுவைத்திடவே!-காதலில்
ஊடலும் வேண்டுமடி! கூடலும் வேண்டுமடி!என்றும்
இனிக்கின்ற உப்பினைப் போலவே!ஈருடல் ஓருயிர் ஆகிடும் புணர்ச்சியிலே!
காதற்களத்தில் உடல் நீர் வியர்த்து வெளியே வந்ததே!
காதலில் இந்த இன்ப இனிக்கின்ற உப்பினையே!
காதலனும் காதலியும் இனிதே பெற்றாரே!-வாழ்வினில்
காதல் பேரின்பமானதே!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/ புன்னகையாலே அச்சம்தரும் இரவைக்கூட மாற்றி பகலாகவே ஆக்கிடவேணும்!

நீயும் சிரித்து வாழவேணும்-உன்னைச்
சேர்ந்தவரையும் சிரிக்கவைத்து வாழவேணும்!-உனது மனப்
பூர்வமான புன்னகையாலே அச்சம்தரும் இரவைக்கூட
மாற்றி பகலாகவே ஆக்கிடவேணும்!

Friday, July 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/வரும் தலைமுறைக்கே நீவிட்டுச் செல்வது உனது நல்ல செயல்கள்தானே!

கடந்துவிட்டது கடந்துவிட்டது கடந்த காலமே கடந்துவிட்டது!
வரும்காலமோ சந்தேகமானது வரும்காலமோ சந்தேகமானது!-அதனாலே நீயும்
வாழும் காலத்திலேயே நல்லசெயல்களையே செய்திடவேணுமே!
வரும் தலைமுறைக்கே நீவிட்டுச் செல்வது உனது நல்ல செயல்கள்தானே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/பண்பில்லாத மனிதரிடத்தே சுதந்திரம் எப்படி இருக்கும்?

பண்பில்லாத மனிதரிடத்தே சுதந்திரம் எப்படி இருக்கும்?
படிப்பில்லாத தேசத்திலே வறுமை இல்லாமல் எப்படி இருக்கும்?
அன்பில்லாத வாழ்வதிலே இன்பம் எப்படி குடியிருக்கும்?
அறிவில்லாத ஞானசூன்யத்திற்கு நல்லது கெட்டது எப்படித் தெரியும்?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/படிக்க முடியாத ஏழைக்கும் அனுபவ அறிவு கூடுமடா!

கொடுக்கமுடியாத கடன்காரன் கிட்ட கெடைச்சமட்டும் ஆதாயமடா!
நடக்கமுடியாத கிழவனுக்கு நாக்குத் தாண்டா மிச்சமாகுமடா!
பார்க்கமுடியாத மானுடத்துக்கு கேள்வி ஞானம் அதிகமடா!
படிக்க முடியாத ஏழைக்கும் அனுபவ அறிவு கூடுமடா!