என்னருமைக் காதலியே!
உன்னை மறக்க நினைக்கும் ஒவ்வொரு
நொடியும் வலிக்கின்றதே!- எந்த காலமும் எந்த
நேரமும் உன் நினைவுகள் மட்டும் தோன்றுகின்றதே!எனதினிமைத் தோழியே!
உன்னை மறந்துவிட்டேன் என்று நெருங்கிய
தோழமைகளிடமே பொய்யுரைத்தேனே!எத்தனைப் பொய்யுரைத்த போதிலும் எந்தன் மனதில்
உன்னை மட்டுமே நினைக்கும் அன்புத்துன்ப வேதனையையே!
மறந்திடும் வழிமுறை நானே அறியேனே!என் துணையின் துணையே!
அந்த காதலின்பத்தினையே - நானே உனக்குரைத்திடவே!
தமிழில் ஒருவார்த்தையே இல்லையன்றோ!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment