நண்பர்கள் தினம்..
உயிர் காப்பான் தோழன்
உள்ளத்தையும் காப்பான் தோழன் -உலகினில்
எதையும் காப்பான் தோழன் நட்புக்காக- நல்லது
எதையும் செய்வான் தோழன்
தாயுடன் பேசமுடியாத
தந்தையுடன் பகிரமுடியாத-
தாரத்துடன் கலந்துரையாடமுடியாத-சுற்றத்
தாருடன் மொழியமுடியாத -எதையும் எந்தவித
மான ரகசியங்களையும் ப்கிர்ந்திடும் நட்பாகுமே!
நண்பர்களைப் போல அருமையானவர் எவரும் இல்லையடா- நல்ல
நட்பு நம்மையும் காத்து நம் நாட்டையும் காக்கும் இலக்காகுமடா!
நல்லறிவு உடையார் நட்பு வளரும் வெண்ணிலவாகுமடா!
நல்ல நூல்கள் படிக்க படிக்க இன்பமாகுமடா!
நல்லபண்புடையாரின் நட்போ! பழகப் பழக இனிமையாகுமடா!
நல்ல நட்பு மகிழ்ந்துவாழ மட்டும் அல்லடா!
நண்பர்கள் வழிமாறும்போது திருத்தாத தோழமை உண்மைத் தோழமை இல்லையடா!
நண்பருக்குள் ஒத்த மன உணர்வே உயர்வாக்குமடா!
நண்பரின் பழக்கமும் அணுகுமுறையும் இரண்டாம் பட்சமடா!
நட்புக்கு முகமலர்ச்சி தேவையில்லையே!
நட்புக்கு உளமலர்ச்சியே அவசியமாகுமடா!
நட்புக்குத் துன்பமும் ஒன்றுதானடா!
நட்புக்கு இன்பமும் ஒன்றுதானடா!
நட்பே இன்பத்தைக் கொடுத்து சிரிக்குமடா!
நட்பே துன்பத்தில் சேர்ந்து துயரத்திலும் பங்கெடுத்து தோள்கொடுக்கும் தோழமை ஆகுமடா!
நட்பே மானத்தை மறைக்கும் ஆடை நழுவும்போதினில் ஓடும் கரங்களைபோலவே!
நண்பனின் துன்பத்தையே துடைதிட ஓடிடும் தோழமையடா!
நட்பே தன்னால் முடிந்த அளவு உதவிசெய்திடவே ஓடுமடா!
நட்பே தன்னையே கொடுத்து தன் நண்பனையே தாங்குமடா!
நட்பே உதட்டளவு புகழ்ச்சியிலே உயராதடா!
நட்பே உள்ளத்தளவு ஒருசின்ன அன்பு உவகையிலே !உண்மைத் தோழமையாகுமடா!
.
.
.
.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment