காதலன் வந்தானே!-அன்புக்
காதலன் வந்தானே!இன்பக்
காதலைத் தந்தானே-தந்தானே
காதலைத் தந்தானே
என்னையே அன்புக் கயிறாய் திரித்து,
அவன் கண்ணில் என்னையே காட்டி
அவன் நெஞ்சினில் என்னையே உருமாற்றி!
அவனையே எனக்குத் தந்து என்னையே அவனுக்குள் புகுத்தி!
என்ன என்ன மாயம் செய்திடவோ! இதழினில்
ஏதேது காயம் தந்திடவோ!மெய்யினில் பொய்யின்றி
காதலில் நாயம் பேசிடவே !
களத்தோரம் வந்தானே
காதலன் வந்தானே!-அன்புக்
காதலன் வந்தானே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment