என்னருமைக் காதலி இவளோ!
கோடிச் சங்குகளின் மத்தியிலே ஒரு வலம்புரிச் சங்கானவளே!-காதலி இவளோ!
மாரீச மாய மானையும் பிடிப்பதற்கே
ஆகாய சந்திரனில் மேயும் மானையும் தூதுவிடுவாளே!
முல்லைக் கொடியும் அரும்பிடவே -இவளோ!
மோகனப் புன்னகையே செய்திடுவாளே!-இவளின்
கண்ணிரண்டும் கெண்டை மீனாகுமே!செவ்
வாயோ! தொண்டைக் கனியாகுமே!வெண்பல்லோ தூயமுத்தாகுமே!
புருவமோ கவிழ்ந்த வானவில்லாகுமே!அவளின் பார்வையோ!என்னை
வஞ்சனை செய்து மனங்கவர்ந்ததே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment