Popular Posts

Saturday, May 16, 2009

மாணவத் தம்பிக்கு!


தம்பி உனது குறிக்கோள்

நீ நடந்து செல்லும்

பாதையின் திசைகாட்டி -

வாழ்வினில் முன்னேறிய எல்லா பெரியோர்க்கும்-அனைத்து

சான்றோர்க்கும் நல்லதொரு குறிக்கோளே காரணம்

உனது வெற்றியின் முதல்படி

உனது குறிக்கோளில் ஒளிந்திருக்கிறது-அதனால்

உனது குறிக்கோளை முடிவுசெய்-ஏனென்றால்

உனது குறிக்கோளே - நீ

நடந்து செல்லும் பாதையின் திசைகாட்டி


உனது குறிக்கோள் நல்லதிசையில்

எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்

நீ ஒரு விஞ்ஞானி

நீ ஒரு வியாபாரி

நீ ஒரு விவசாயி

நீ ஒரு ஆசான்

நீ ஒரு சமூகப் பணியாளன்

நீ ஒரு நல்ல அரசியல்வாதி

நீ ஒரு நல்ல மருத்துவன்

நீ ஒரு நல்ல பொறியாளன்
நீ ஒரு இசைமேதை
நீ ஒரு கலைஞன்

நீ ஒரு நல்ல வழியினில் சமூகத்தில்

நீ யாராக வேண்டுமானாலும் ஆகலாம்


உனது குறிக்கோள் வெல்ல,வெற்றிகொள்ள

உனது குடும்பம்

உனது ஆசான்

உனது நண்பர்

உனது ஊரின் சான்றோர்கள்

அனைத்து நல்ல உள்ளங்களின் உதவி

உனது குறிக்கோளை ஜெயித்துக்காட்டும்


தம்பி

உனது கல்வியின் செம்மை-அதி

நீகாட்டும் அக்கறை

நீ கூறும் சரியான பதில்கள் வேண்டுமானால்

உனது வகுப்பறையினில் ;உன் ஆசானை

வேண்டுமானால் திருப்தி செய்யும்-ஆனால்

உனது தேர்வறையின் அந்த மூன்றுமணி நேரம் தானே

உன்னை இந்த வெளியுலகத்திற்கு

அறிமுகப் படுத்தும் -அதன்

அபரிதமான வெற்றிதானே-உன்னை

மேல் நோக்கி முன்னேற்றும் படிக்கட்டு


தம்பி உனது

புதியபாடங்கள் கடுமையான பாடங்கள்

படித்து நிறுத்திட


அனுபவத்தில் உனது ஞாபகத்தில்

அனைத்து பாடங்களும் நிற்பதற்கு

அதிகாலையோ? காலையோ? மாலையோ?

எந்த நேரம் உகந்ததென்று நீயே தேர்வுசெய்து

படிக்க அறிந்து கொண்டிடவேணும்-அதுவே உனக்கு

படிக்க உகந்த நல்ல நேரமாகும்


தம்பி நீயும்

படுக்கையிலே படுத்துக் கொண்டு

படிப்பதையே தவிர்த்திட வேண்டும்-மதியம்

சோம்பலான நேரத்திலும் படித்த

பாடங்களையே திருப்பிப் பார்க்க மறந்திடாதே!


தம்பி உனக்கு

எந்த இடத்தில் படிக்கவசதி?

மாடிப்படியா?

மரத்தடியா?

மொட்டைமாடியா?

தெருவிளக்கா?

காம்பவுண்டு சுவரா?

உனக்கு எது ?சரியென்று தேறும் இடத்தில்

ஊன்றி படித்திட வேண்டும்


தம்பி உனக்கு

எந்தபாடம் படிக்கவேணும்

அந்தபாடக் குறிப்பின் ஒருமித்த வாசிப்பு

அவசியம் பாடத்தை நினைவினில் கொள்ளவே

இந்த பாடத்தில் என்ன? தெரிந்து கொள்ளபோகின்றாய்?

எந்தமாதிரியான கேள்விக்கு

இந்தபாடத்தில் விடைகிடைக்கும்?-என்ற

கேள்விதனை உன்னுள் கேட்டிடவே மறந்திடாதே?


தம்பி நீயும்!

மெதுவாக மெதுவாக-உனக்கு

வாசித்து கிடைத்த குறிப்புகளை-பொருள்

புரிகின்ற வரையினில் வாசித்துப்பார்!

புரியவில்லை என்றாலே

தயக்கமின்றி ஆசானைக் கேட்டுப்பார்!


தம்பி நீயும்

வாசித்த குறிப்பை உனது மனதினிலே

வளையவந்து எண்ணிப்பார்

நீ படித்த குறிப்புகளை

உன்மனக்கண் முன்னே தோன்றும்படி

உன் உள்மனதினில் நினைத்துப்பார்


தம்பி நீயும்

புதிய பாடங்களை படிக்குமுன்பே

பழைய பாடங்களை மீண்டும் மீண்டும்- நினைவினில்

பதிய திரும்ப திரும்ப படித்துப்பார்!


தம்பி உனது

வாசிப்பும், மனப்பாடம் செய்வதும்,மட்டும்

பாடங்களை உனது மனதினில் தங்கச் செய்யாது

பாடங்களை படிக்கபடிக்க - நீயும்

குறிப்பெடுத்திட வேண்டும்


No comments: