Popular Posts

Saturday, June 5, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அன்புக்கு முன்னே எல்லாம் இங்கே இன்பம் இங்கே!

அன்புக்கு முன்னே
எல்லாம் இங்கே இன்பம் இங்கே!


காதலுக்கு முன்னே
நானிங்கே! நீயங்கே!
காதலித்தப் பின்னே
நானுமிங்கே நீயுமிங்கே!
அன்புக்கு முன்னே
எல்லாம் இங்கே இன்பம் இங்கே!
வானெங்கும் ஒன்றாகி நின்ற உணர்வும் நீயல்லவா?-உன்னறிவில்
நானாகத் தோன்றும் சுகம் தேனல்லவா?
அலையாதிருந்த அறிவும் நீயல்லவா?-அங்கு
நிலைபெற்றிருந்த சுகமும் நீயல்லவா?
உள்ளம் கரைந்திடவே உடலும் கரைந்திடவே-ஆனந்த
வெள்ளம் அனுதினமும் கரைபுரண்டு ஓடுதடி

No comments: