தனியுடைமை கொடுமையும் மெய்யடா!-அதை எதிர்த்த நம் ஒற்றுமையான போராட்டமும் மெய்யடா!
காண்பதும் மெய்யடா! கேட்பதும் மெய்யடா! பேசுவதும் மெய்யடா!
காதலும் மெய்யடா! தாய்மையும் மெய்யடா! பாசமும் மெய்யடா!
படிப்பறிவும் மெய்யடா! பகுத்தறிவும் மெய்யடா! நேசமும் மெய்யடா!
வாழ்வதும் மெய்யடா! வாழ்க்கையும் மெய்யடா! வஞ்சகர் வஞ்சமும் மெய்யடா!
வேலையின்மையும் மெய்யடா! விலைவாசி உயர்வும் மெய்யடா!
வாழ்வுக்கான போராட்டமும் மெய்யடா! தனியுடைமை கொடுமையும் மெய்யடா!-அதை எதிர்த்த நம் ஒற்றுமையான போராட்டமும் மெய்யடா!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ஆழமாய்ப் படியுங்கள் அனைத்தையும் படியுங்கள்
அழகுற எழுதுங்கள் தோழரே
வாழவே வழியின்றி வதைபடும் ஏழைகள்
வாழ்ந்திட எழுதுங்கள்தோழரே அவர்
வாழவே எழுதுங்கள் தோழரே
நீளமாய் ஆழமாய் கிடக்கின்ற பாரதம்
நிமிர்ந்திட எழுதுங்கள் தோழரே
நிமிர்ந்ததும் பாடுங்கள் வாழ்கவே
அன்புத்தோழமைக்கு,
தமிழ்பாலா,
உங்களின் உத்வேகக் கருத்துக்களுக்கு
எனது செவ்வணக்கங்கள்,
போராட்டம் புரட்சி என்று எழுதிவிட்டாலே ஏதோ இலக்கியமல்லாது எதார்த்த வார்த்தைகளை எழுதிவிடுகிறார்கள் என்று விமர்சிக்கின்ற இலக்கிய உலகிலே என்னை இன்னும் ஆழமாகப் படித்து அழகான தமிழில் மக்களுக்காக எழுதச்சொல்லும் எனது ஆசாண் நெல்லைக் கண்ணன் அவர்களுக்கு ,
எனது பிரபஞ்சத்தைக் கடந்த வணக்கங்கள் இன்னும் எழுதவும் நன்றாய் எழுதவும் உங்களின் உத்வேகக் கருத்துக்கள் எனக்கு ஊக்க மருந்தாக இருக்கிறது என்றால் மிகையாகாது,இன்னும் உங்களின் மோதிரக் கரங்களினால் குட்டுவாங்கக் காத்திருக்கும் தோழமையுள்ள தமிழ்பாலா
Post a Comment