Popular Posts

Saturday, August 28, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:-உன் இதயம் அழுதபோதிலுமே -உன் இதழ்கள் சிரிக்கட்டுமே! விழுவது எழுவதற்கே! தோல்வியும் தொடர்ந்துவரும் வெற்றிதனுக்கே!

-உன்
இதயம் அழுதபோதிலுமே -உன்
இதழ்கள் சிரிக்கட்டுமே!- நீ
விழுவது எழுவதற்கே! -உன் தோல்வியும் தொடர்ந்துவரும் வெற்றிதனுக்கே!

சிறகிழந்த பறவையாகவே - இன்ப வானில்
பறந்திடவே முடியவில்லையே!
என்ற சோகங்கள் ஏனிங்கே?உலகினில்
மாற்றங்கள் இல்லாது போவதில்லையே!என்றும் துன்பங்களும்
வாழ்வினில் தொடர்ந்து வருவதிலலையே!
துயரத்தை தூரத்தே தள்ளிவிட்டு உன் நம்பிக்கை கைக்கொண்டு நிமிர்ந்திடவே வேண்டுமே!
-உன்
இதயம் அழுதபோதிலுமே -உன்
இதழ்கள் சிரிக்கட்டுமே!
விழுவது எழுவதற்கே! தோல்வியும் தொடர்ந்துவரும் வெற்றிதனுக்கே!

No comments: