Popular Posts

Monday, August 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:வாழும் உலகத்திலே வெறுங்கனவு மட்டுமே காணமுடியுமா?

கத்தாழை மாடத்தின் கிராதியிலே சாஞ்சுக்கிட்டு- எந்தன்
காதலின் பெருமூச்சையே !
தூரத்தே வசந்தத்தின் தென்றலிலே கேட்டேனடி!மவுனத்தின்
முடிவில்லாததாலே ஏங்குகின்றேனே!
ஒரு
மெல்லிய பனித்துளியும் சிணுங்கிடுதே!-உயர
மேலே மின்மினியும் பறந்திடுதே!என்னில்
ஆழமாகவே வளர்ந்ததே எனது ஏக்கங்களே!- நிலவே!
ஓர்தனிமலர் போலவே மேகங்களிடையே தத்தளிக்கின்றதே!
- நானோ
வானின் நீலத்தையும் , ஆழத்தையும் பார்த்தபடியே!- நானும்
வாசலைத் தாண்டியே மலைதனைக் கடந்தே
வாழும் உலகத்திலே வெறுங்கனவு மட்டுமே காணமுடியுமா?

No comments: