Popular Posts

Saturday, August 28, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:இன்று முறையாய் உழைக்கும் சமுதாயம் ஒன்றுபட்டாலே- நாளை மக்கள்ஜன நாயகம் நன்றாய் வாழுமடா!

இன்று முறையாய் உழைக்கும் சமுதாயம் ஒன்றுபட்டாலே- நாளை
மக்கள்ஜன நாயகம் நன்றாய் வாழுமடா!
கிடக்கட்டும் கிடக்கட்டும் நாளையடா!
நடக்கட்டும் நடக்கட்டும் இன்றடா!--கனவாய்
போகட்டும் போகட்டும் நேற்றடா!- நனவாய்
ஆகட்டும் ஆகட்டும் இன்றடா!
உழைப்பவரின் ஒன்றுபட்ட உணர்வின்முன்னாலே
எந்த சக்தி எதிர்நிற்கும் பார்ப்போமடா!
இன்று விதைதனை ஒழுங்காய் போட்டாலே- நாளை
அறுவடை சரியாய் ஆகுமடா!
இன்று முறையாய் உழைக்கும் சமுதாயம் ஒன்றுபட்டாலே- நாளை
மக்கள்ஜன நாயகம் நன்றாய் வாழுமடா!

No comments: