உந்தன் விழி இமைகளோ? விசிறியாகவே படபடக்கின்றதோ?
உந்தன் கண்களோ! உறங்கிடவே மறுக்கின்றதோ?
மாலையும் வந்ததோ! கூடவும் தலைவனின் நினைவும் வந்தததோ!
மாலைப்பொழுதே! காதல் நோயினையே கூட்டியதோ!
ஆண்மானும் தன்பிணையைத் தழுவியதோ?=களிற்று
ஆனையுமே தன் பிடிதனை தழுவி நின்றனவோ
கார்காலம் வந்தும் காதல்தலைவனின் வரவும் வரவில்லையா?-அப்படியென்றால்
கார்காலம் இன்னும் வரவில்லையே !
காதல் தலைவனோ!சொன்னதைச் செய்யும் உத்தமன் அல்லவா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment