எந்தன் உயிரின் உள்ளே !
ஏற்றிய ஒளிமிகுந்த விளக்கே!
என்னாளும் திரு நாளாய் ஆக்கிடும் எனதன்புத் தேவதையே!-உன்னையே
எண்ணித் தெளிவுற்றேன் காதலன்பினாலே!காதலியே!
உன்னை நானே எங்குவந்து காண்பேணோ?
எண்ணித் தெளிவுற்றேன் காதலன்பினாலே!காதலனே!
உன்னை நானே எங்குவந்து காண்பேணோ?
காதலிஉந்தன் அழகிய மலராம் இதழ்களே!
காணுமிடமெல்லாம் வந்துதோன்றியே !காணுமினிய
காட்சியாகியே என்னுயிரைக் கொள்ளை கொண்டதே!
காதலிஉந்தன் எழிலாம் கண்களே!அன்றுமலர்ந்த தாமரையோ?
கன்னி உந்தன் வடிவாகவே தோன்றிடக் கண்டேனே!
எந்தன் உயிரின் உள்ளே !
ஏற்றிய ஒளிமிகுந்த விளக்கே!
என்னாளும் திரு நாளாய் ஆக்கிடும் எனதன்புத் தேவதையே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment