காதல் தலைவனே !எனது ஆசைத் துணைவனே!- நீயும் எந்தன்
கண்ணுக்குள் பார்வையாக இருப்பதாலே!-காதலி நானும் எந்தன்
கண்ணுக்குள் மைதீட்ட வெறுத்துவிட்டேனே!
ஒவ்வொரு நொடியும் ஓராயிரம் கோடி சிந்தனைகள் செய்கின்றேனே!
காதலனே உனைக்கூடி நிற்கும்
காலமெல்லாம் எந்தனுக்கு குளிரானதே!-அன்புக்
காதலனே நீயும் ஊடலுற்ற
காலமெல்லாம் ஏன் தான் தீயானதோ?-இன்று
காதலனே நீயும் வந்தபோதே!இந்த
மாலை நேரம் நானும்
காதலாலே கூடிடவா?
ஊடலாலே விளையாடவா?-இல்லை
உண்மையாக உவத்திடவா?-என்று
ஒவ்வொரு நொடியும் ஓராயிரம் கோடி சிந்தனைகள் செய்கின்றேனே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment