Popular Posts

Wednesday, July 8, 2009

தனிமைதுயர் வாட்டுமென்றே-அந்த தலைவனுக்கே தெரியாதா?

நினைத்து ஒன்று சொல்லாயோ? எனதினிய நெஞ்சே
துன்பம் வளரவரும் மாலையிளம் பொழுதினிலே-காதல்
இன்பம் மலர ஒரு கருத்தும் சொல்லாயோ?-அன்று
அணைத்து ஒன்று சொன்னவனே- அன்பில்
இணைத்து ஒன்று கொடுத்தவனே-அவனின்
துணையில் இன்று இல்லையென்றாலே
தனிமைதுயர் வாட்டுமென்றே-அந்த
தலைவனுக்கே தெரியாதா?

No comments: