கோடையில் ஓர்மழலை மழை!அதன்
சாரலில் நனைந்து குளித்தேன்!
கத்திரி வெயிலும் தாண்டி!ஒரு குலுகுலுப்பான உணர்வு!
இன்று கோடைமழை மட்டுமல்ல தமிழகத்தின்
ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும்
இருபதுகிலோ அரிசி அதுவும்
விலையில்லாத அரிசியோ இன்று!-ஆனாலும்
விலையேற்றம் இல்லாத பொருள்கள் என்று?
விலையில்லாத அத்யாவிசிய நுகர்பொருள் என்று?-மக்களை
அச்சுறுத்தும் வரிகளே இல்லாத தேசமென்று?
உழைப்பிற்கு உத்திரவாதமானதொரு உலகமென்று?-தனிச்
சொத்துடைமை இல்லாத நாடாவது என்று?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment