நிலவே நிலவே நீயும் போய்விடு-என்
நிம்மதியை நீயே என்னிடமே தந்துவிடு!-அந்தி
மலரே மலரே நீயும் மணக்காதே!-இந்த
மங்கையின் நெஞ்சினை உருக்காதே!
என்
நெஞ்சமே நெஞ்சமே கலங்குது கலங்குது!=மலர்
மஞ்சமே மஞ்சமே தவிக்குது தவிக்குது!-எந்தன் பூமேனி
கொஞ்சமே கொஞ்சமே மயங்குது மயங்குது-தலைவனே நீயும் காலத்தில் வாராது
காதலின்பம் தாராது தனிமைப் பிரிவுதான் தந்தே
வஞ்சமே வஞ்சமே செய்வது நியாயமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment