அந்தப் பனிமழை.
வெப்பத்தைப் பருகிக் கொண்டே -- கண்ணீர் வற்றி
வேதனையில் கரைந்து போனது!
அந்த இளமாலைப் பொழுது
இரவினைத் துணையாக்கியே--தன் நிறம் மங்கி
இருட்டினில் மறைந்து போனது!
அந்த வெண்ணிலவு
ஆதவனுடன் பேசிக்கொண்டே
பகலினில் ஒளிந்து கொண்டது!
அந்த இளந்தென்றல்
மழையோடு தோழமை கொண்டே
மழைததூரலிலே சங்கமித்துக் கொண்டது!
அந்த குயிலோசை
உணவுக்கான தேடுதலோடு
விடிகாலையில் பறந்துபோனது
அந்த வறுமைப் புலம்பல்கள்
காலை அவசரத்தில்
கடமைச் சராசரியில் கழிந்துபோனது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment