Popular Posts

Monday, October 11, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/”;காட்டுமிராண்டிக் காலத்திலேயே -”

காட்டுமிராண்டிக் காலத்திலேயே -மனிதன் ராகத்தோடு’ ஓ” வென்றே!
பாடத்துவங்கி விட்டானே!-இசையில்
பயணிக்கத் துவங்கி விட்டானே!-மொழிக்கும் முன்னாலே
பாடகனாய் ஆகிவிட்டானே!-சங்கீதத்தை
படித்திடவே நடந்துவிட்டானே!

ஆதிமனிதன் அவன் கத்தியதுமே! பாடலானதே!-அவனின்
உள்ளக் கிளர்ச்சி தோன்றிய போதே- மனிதன் அவனே
பாடத் துவங்கி விட்டானே!

கதைகளும் சொன்னானே!-விடு
கதைகளும் போட்டானே!-தன்
அனுபவ மொழிகளையே
அவன் தன் பாடலாலே அறிவித்தானே!

பேச்சுமொழி தோன்றுமுன்னே-ஆதிமனிதன்
பேசினானே!

சைகை மொழியானது ஒருகாலமே!
பேச்சு மொழியானது பின்னொரு காலமே!
எழுத்து மொழியானது வளர்ந்த காலமே!
சைகை பேச்சான போது போனது-பின்
பேச்சு எழுத்தான போது அறிவாய் பதிவானது
எழுத்தும் பரிணாமத்தில் மனிதனின் நாகரீக பகுத்தறிவானதே!

No comments: