எனது இனிய சினிமா தேவதையே!- நீயோ
இன்றைக்கும் வனப்பாகவே வலம்வருகின்றாயே!-உன்
வசீகரமும் வாடாமலே!
வண்ணக் கலவையாகவே!-ஊடக
சிற்றிடைதான் கொண்டு சிலிர்க்கின்றாயே!-மக்களின் உண்மைமுகத்தினை
சிறு நடை பயின்று சிரிக்கின்றாயே!
பேசும் நிலவாக திரைவானிலே உலவுகின்றாயே!எம்முலகத்தின்
இனியவளே இனிப்பவளே!காதில் தேனாகவே
இசையாகி சுவைப்பவளே!-என்
மனதுக்கு உகந்த மலரானவளே!-எந்தன்
மானசீக வண்ணத்திரை காதலியே!-எனது
சிந்தனைகளையே செழிக்கச் செய்தவளே!
தமிழர் எங்களது வாழ்வினையே!
சீரும் சிறப்பும் பேரும் புகழும் ஆக்கியவளே!-திரைக்
கதா நாயகன் , நாயகிகளையே முதுமையாக்கிவிட்டு நீயோ!
இன்றும் இளமை குன்றாமல் இருக்கின்றாயே எனதினிய சினிமா தேவதையே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment