Popular Posts

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-” சுதந்திரக்காற்றின் ”

அன்பு ஊடினதோர் இடமெங்கே?-காதல் தேனிசை
ஒலிதான் கேட்பதெங்கே?-கண்ணில்
ஒன்றாக காணுகின்ற ஆசைக்களி நடனமெங்கே!?
இன்பத்தில் இணைக்கின்ற இல்லறவாழ்வின் தத்துவமெங்கே?

விட்டுக்கொடுத்து வாழ்கின்ற வாழ்வினிலே துன்பமென்றும் இல்லையடா!
வீண் தர்க்கம் செய்து விதண்டாவாதம் சமூகவாழ்வினிலும் தொல்லையடா!
அன்புகொண்ட மனங்களின் ஒற்றுமையே உன்னதமாக்கிடும் இம்மண்ணிலே!
உறுதிகொண்ட சுதந்திரக்காற்றின் உரிமைவேட்கை என்றும் வென்றிடுமடா!









No comments: