Popular Posts

Sunday, October 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/:-கையூட்டாம் வைட்டமின் “ப”

-கையூட்டாம்
வைட்டமின் “ப” கேட்கும்
தேசம் எங்கள் தேசமடா!
காசிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற தவறான தத்துவத்தையே
கையிலெடுத்த தட்டுக்கெட்ட தேசம் எங்கள் தேசமடா!-இது
தன்வாக்கினையே காசுக்கு விற்கும் மானங்கெட்ட தேசமடா!

காசுள்ள கனவான்களின் கைக்குள்ளே சிக்கி நாறும் தேசமடா!- நல்ல
கடமையுள்ள மனிதர்கள் நாணிக்குறுகி நிற்கும் தேசமடா!

பிறப்பு,இறப்பு சான்றிதழ்களுக்கு கூட -கையூட்டாம்
வைட்டமின் “ப” கேட்கும்
தேசம் எங்கள் தேசமடா!-தங்கள்
கடைமைதனைச் செய்வதற்கே காசுதனை எதிர்பார்க்கின்ற
கடைந்தெடுத்த கேடுகெட்ட நாசாமாக போயிவிட்ட தேசமடா!
இப்படிப்பட்ட லஞ்சமாம் பேர்களுக்கே!~
நாமெல்லாம் சரியான கடிவாளம் போடவேணுமே!
சாட்டைதனைச் சுழற்றிடுவோம்! தவறினையே மாற்றியே!- நாட்டினையே
சரியான பாதைதனுக்கே திருப்பிடுவோமே!

No comments: