வெளியேதடா? வெளிக்குள்ளே வெளியங்கேதடா?
வேதாந்த வெளிகடந்த ஒளியங்கேதடா?
காற்றுக் கடந்த அண்டமும் ஏதடா?-அப்புறத்தே
தோன்றுகின்ற சோதியும் ஏதடா?
நினைவும் ஏதடா? மறப்பும் ஏதடா?
நித்தியம் ஏதடா? நிர்குணமும் ஏதடா?
நேரான பூரணத்தின் நாதமும் ஏதடா?
சுழியேதடா? சுழியடக்கும் சூட்சுமமும் ஏதடா?
எல்லாமே பகுத்தறியும் பகுத்தறிவில் அறிந்துவிடும் மெய்ஞானமே ஆகுமடா!
மண்ணேதடா? விண்ணேதடா?
கண்ணேதடா?கருத்தேதடா?
எல்லாமே பகுத்தறியும் பகுத்தறிவில் அறிந்துவிடும் மெய்ஞானமே ஆகுமடா!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment