எழுத்தாளனாகிய நான்!
விதையாகவே மண்ணில் விழுந்து
முளையாகவே முளைத்து எழுந்து வேர்விட்டுப் பதிந்து!
விருட்சமாகவே கிளைகள் விரித்து கனிகொடுத்து மக்களைக் காத்து
யுகயுகமாகவே ப்ரவித் தழைக்கின்றவன்!
நான்
சிறுகாற்றுக்கு ஒடிந்து விழும் ஒதியமரமல்ல!
சிறுசலசலப்பில் முறிந்து வீழஒன்றும் முருங்கை மரமும் அல்ல!
நான்
காலத்தைக் கடந்து நிற்கும் பிரபஞ்ச ஆலமரம்
காலத்தின் கண்ணீரையும் துடைத்து நிற்கும் ஒரு மக்கள் இலக்கியப்
படைப்பாளன்!
எனக்கு இறப்பு என்பது என்றைக்கும் இல்லை இல்லையே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment