ஒப்புரவு ஒழுகடா!
உழைப்பினை மதியடா!~
உழைப்பவர் அதிகாரம் அரியணையில் ஏறிடும் வரையினிலே!
உந்தனுக்கே உறக்கம் ஏதடா?
உழைக்கின்ற பேர்களுக்கும் உழைப்பினையே சுரண்டுகின்ற் அரக்கருக்கும்
ஒருபோர் நடக்குதிங்கே உழைப்பவரே வெல்லும்காலம் தூரத்தில் இல்லையே!
இரண்டுவர்க்கம் இல்லாத பொதுவுடைமைச் சமுதாயமே உருவாக்கிட ஓடிவாடா!
ஒருவர்க்கம் அடிமைப் படுத்திடும் த்னியுடைமை ஆளும்வர்க்கம்
ஆடுகின்ற ஆட்டத்திற்கே நீயும் முற்றுபுள்ளி வைக்காமலே
இந்த உலகினில் இம்மையிலே சுவர்க்கம் என்பது இல்லையடா!
ஒப்புரவு ஒழுகடா!
உழைப்பினை மதியடா!~
உழைப்பவர் அதிகாரம் அரியணையில் ஏறிடும் வரையினிலே!
உந்தனுக்கே உறக்கம் ஏதடா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment