கார்வந்தால் தேர்வரும் தேர்வந்தால் காதல்தருவார் வருவார் என்று
காதலி என்னிடமே!
காதல்தலைவன் அன்றுசொன்ன அறிகுறிகள் தோன்றுதடி!
ஆனாலும் எனதினிய தோழியே! காதலனாம்
அவனின் இனியவரவினைத்தான் காணலியே!
எனது விழியிமைகளோ! விசிறியாகவே படபடப்பதென்னவோ?
என்கண்களுமே உறங்கிடவே இமைமூட மறுப்பதென்னவோ?
மாலைக்காலமும் வந்ததடி கூடவே -
காதல் தலைவனின் நினைவும் கூடவே வந்ததடி!
ஆண்மானும் தன்பிணையையே தழுவியதடி!களிற்று
ஆனையுமே தன்பிடியினைத் தழுவி நின்றதடி!
மாலைவந்ததே காதலினையே அதிகமாக்கிடவே தானோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment