எனது
உள்ளங்கனிந்த நன்றியை நானுனக்கு உரித்தாக்குமுன்னே
என்காதலியே
எனது
கண்கள் உனது கண்களுக்கு நன்றிசொல்லி கலந்துவிட்டதே!
எனது
முகத்தையே நானுன் மனக்கண்ணாடியிலே பார்க்குமுன்னே!
எனது
முகத்தையே உனது கண்களே பிரதிபலித்தனவே!-இனி
எனதென்பதும் உனதென்பதும் வேறு வேறு இல்லையடி
நமதென்பதே நாமானதாலே நாள்தோறும் சந்தோசமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment