குணமயிலே உன் தடத்தை
குச்சிகட்டிக் காத்திடவா?
ஆத்தாடி கண்ணாத்தா!
அடிமடியில கட்டட்டா?
கள்ளியம்பூச் சாரலிலே!
அள்ளட்டா முள்ளட்டா?
ஆதரவு சொல்லாத்தா!
அன்புக்குள்ள நில்லத்தா!
ஆசைவெள்ளம் கொள்ளத்தா!
ஏழைமனம் வெள்ளைதான்!
பாவிமனம் படும்பாடுதான்
வாயாலே சொல்லமுடியாத
வார்த்தைகள கண்ணாலே
காதகியே சொல்லுறயே!
கண்ணுக்குள்ள காரணத்த
காலமெல்லாம் சொல்லாம
பூட்டிவெச்ச மன்சுக்கு
பூலோகம் சொந்தமில்ல!- நீயும்
புரிஞ்சிகிட்டா துன்பமில்ல!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment