குருவித் தலையில பனங்காய வைக்கவும் கூடாது-யானைப்
பசிக்கு சோளப்பொரியும் போட்டிடவும் கூடாது!
அவரவர் தேவைக்கு ஏற்றாற்போல் உழைப்பினைக் கொடுத்திட வேணும்!
அவரவர் திறமைக்கு ஏற்றாற்போல் வாய்ப்பினைத் தந்திடவேணும்!
அறிவினை அறிந்து அறிவியல் கற்று உலகினில் உயர்ந்திட வேணும்!
உண்மையை புரிந்து நன்மையை செய்து வாழ்ந்திட வேணும்- நல்லோர்
அடிச்சுவட்டில் நாம் நடந்து இம்மண்ணின் மேன்மையாக்கிட வேணும்!
தனிமனிதன் இடத்து தேவையன்றி சொத்துக்களும் இருந்திடவே கூடாது!-எல்லா
மனிதருக்கும் உணவு,உடை,வீடு,சுதந்திரம் இல்லாமலிருக்கவே கூடாது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment