வெயில் என்தோழன்
என் தோளில் கைபோட்டு
என்னோடு உலகெல்லாம் சுற்றிவர துணைநின்றானே!
கரைகளற்ற நதியாகவே அவன் எல்லாத் திசைகளிலும்
கங்குகரையின்றி தங்குதடையின்றி
எங்கும் பறந்து பாய்ந்தோடினானே!
சிலவேளை அவனே சிறுமழலை போலவே
மெல்ல மெல்லவே சன்னல்வழியே எட்டிப் பார்ப்பானே!-மாலை
மறுவேளை இளந்தென்றலோடு சேர்ந்து என்னைஅணைத்தே தாலாட்டுவானே!
அவனென் உடலிலும் உள்ளத்திலும் வரைந்த சித்திரங்கள் என்றும் அழியாதவையே!
வெயில் என்தோழன்
என் தோளில் கைபோட்டு
என்னோடு உலகெல்லாம் சுற்றிவர துணைநின்றானே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment