பயணம் பயணம் பயணமடி-வாழ்க்கைப் பயணமடி
பிறப்புமுதல் இறப்புவரை வாழும் நாள்வரையில்
பயணம் பயணம் பயணமடி-வாழ்க்கைப் பயணமடி
பயணம்
துவங்கிய போதோ நினைவில் இல்லை-பயணம்
தொடரும் நாளிலோ வாழ்வும் புரியவில்லை-பயணம்
முடியும் இடம் தெரிந்தபோதும் இப்போதே போக முடியவில்லை
பயணத்தை இன்றே முடித்திட நானொன்றும் கோழையில்லை!
அனுதினமும் நடக்கின்ற பயணத்தில் இன்ப இலக்கினை அடையவில்லை-பயணத்தில்
அன்றாட தேவைக்குப் போராடும் பாதைக்கு இன்னும் குறைவில்லை!
அரசியல் வேடதாரிகளின் சொல்கேட்டு என் ஏமாற்றத்திற்கோ பஞ்சமில்லை-ஐந்து
ஆண்டுக்கு ஒருமுறை என் தலைமொட்டை அடிக்கப்படுவது இன்னும் நிற்கவில்லை
கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தேன் நானிதுவரை நல்லது கெட்டது தெரியாமலே
காலத்தை ஓட்டிய முட்டாள் தனத்தை எண்ணி நிமிர்ந்து விழித்து எழுந்து நிற்கின்றேன்!
பயணம்
எங்கே போகிறேன் என்று இப்போது நானே தெளிவாய் தெரிந்துகொண்டேன்
நல்லமனிதரின் துணையோடு புதியபாதை நானும் நடக்கின்றேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment