அஞ்சுகின்ற பெண்ணென்றும் ஆண்மையுள்ள ஆணென்றும்
அஞ்சு பஞ்ச பூதத்திற் பிரிந்ததுண்டா?அவற்றின்
நெஞ்சிலுள்ள வஞ்சகங்கள் வேறுமுண்டா?
நிறம்வேறோ? குணம்வேறோ? நேசம் வேறோ?
மிஞ்சுகின்ற உயிர் ஆண்பெண் என்றும்
மெய்கண்ட நூல்கள் தான்பிரித்தது தானுண்டா?
அறிவினிலே அன்பினிலே ஆணுக்குப் பெண்குறைவில்லையே!
திறமையிலே திட்டத்திலே ஆணுக்குப் பெண் தாழ்வில்லையே!
ஆண்பெண் சமத்துவத்தையே ஏற்றிடுவோம்!-தனியுடைமை
ஆணாதிக்க சமூகத்தையே வீழ்த்திடுவோம்?
ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவொன்றே தானடா!
ஆனாலும் பேதைகுணம் என்று பித்தர்களும் பிதற்றுவாரே!
வீணுக்கு எடுத்த ஜென்மம் அனந்தக் கோடி!
விவேகமுத்தி பெற்றவர்கள் அவருளுமுண்டு
ஊணுக்கு தேடியுண்டே உறங்கியிருந்த
உலுத்தர்களும் உண்டு ஜூவராசிகளில் அனந்தக்கோடி
ஆணும் பெண்ணும் சமமென்றே
பகுத்தறிவாலே நாமும் அறிந்து நடப்போமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment