காதலியே உந்தனுக்கே காதல்வரும்
நீயும் வந்து பாரடி!
நெஞ்சாரவே பாடடி!
நேசத்திலே கூடடி!
நெருக்கத்திலே ஊடடி!
பருவத்திலே நாடடி!-காதல்
பண்பினிலே தேடடி!
குளிர் நிலவும் வந்ததடி!
கோலமயிலும் ஆடுதடி!
நீலக்குயிலும் பாடுதடி!
தென்னங்கீற்றும் சலசலக்கவே! தென்றலிலே
தெம்மாங்கும் கலகலத்ததடி!காதலியே உந்தனுக்கே காதல்வரும்
நீயும் வந்து பாரடி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment