Popular Posts

Friday, September 17, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/_:-மழையே நீ செய்திடும் சேவைக்கெல்லாம் மக்கள் என்னகைமாறுதான் செய்திடுவாரோ?

ஓ!மழையே உவகையின் குழந்தையே!
ஒருபுள்ளியில் நீயும் தெரியாமலே!
நான் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த இன்ப வேளையிலே
ஓரிடத்தில் மையம் கொண்டு நீயும்
அங்கேயே சஞ்சாரம் செய்திடவே துணிந்து விட்டாயோ?
காற்றின் போக்கினிலே காலாற நடந்துதான் நீயும் போனாயோ?
கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் பார்வைக்கு தெரியாமலே
கண்ணான நீரினையே கொட்டிவிட்டு கொண்டாட்டம் தான் நீயும் போட்டாயோ?
மரத்தினையும் ஆட்டிவிட்டு காற்றோடு நீயும் ஆனந்த தாண்டவம் தான் போட்டாயோ?
மண்ணுக்கு வளஞ்சேர்க்கும் பொது நலனில் தோழமைதான் நீயும் கொண்டாயோ?-மழையே
நீ செய்திடும் சேவைக்கெல்லாம் மக்கள் என்னகைமாறுதான் செய்திடுவாரோ?அவரோ
மரந்தனையே வெட்டாமல் இருந்தாலே உனக்கும் உலகுக்கும் நன்மை ஆகிடுமே!

No comments: