நழுவாதே நழுவாதே?-ஏழுசுர நாத உல்லாசமே!
போகாதே போகாதே! காதல் மெல்லிசை ராகமே!
காதலி நீ முணுமுணுக்கும் தெம்மாங்கிசைக்கு-அடியே
முத்தமிழ்தான் முந்திவிரிக்காதோ?
உன் இதழில்
மண்ணும் அதிரச்சுழலும் காதல் அலைகள்
மெளனத்தில் காத்திருக்காதோ?
உன்செம்மொழி
தேனிசைக் கேட்கும் என்கண்களோ?
வியப்பாலே பூத்திருக்காதோ?
காத்திருக்கும்
துன்பகாலம் தொலையாதோ?
கவலையெல்லாம் மறையாதோ?
காதலி
உன் காதல் தேனிசைக் கவிதையும் ஒலிக்காதோ?
நழுவாதே நழுவாதே?-ஏழுசுர நாத உல்லாசமே!
போகாதே போகாதே! காதல் மெல்லிசை ராகமே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment