குமருன்னு இல்லாம வாக்கப்பட்டேன்- நானே
மலடுன்னு இல்லாம பிள்ளை பெத்தேன்
கொண்டவன் துணையுன்னு வாழவந்தேன் -ஆனா எனக்கு
வாச்சவனோ குடிகார நாயாச்சே!-எங்க திரும்பினாலும் -இங்க
டாஸ்மார்க் கடையாக ஆச்சே!இந்த குடிகாரனோ!
கூலிய எல்லாம் குடிச்சானே-இங்க
கும்பி பசியாலே வாடிப் போச்சே!-பள்ளிக்கூடத்து
பக்கத்துல சாராய கடையிருக்கே!
படிக்கவாற புள்ளைக்கு எல்லாம் இடைஞ்சலாச்சே!-ரவுடிப் பய
நாட்டாமை இங்க பெருத்துப் போச்சே!
நல்லவங்க கருத்து எளைச்சுப் போச்சே!-இங்க
நல்லது எப்போ? நடக்குமுனு கேள்வியாச்சே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment