படிக்கவும் நாவிருக்குது பாடவும் இதழிருக்குது!
பிடிக்கவும் கரமிருக்குது அணைக்கவும் நெஞ்சிருக்குது!
நடிக்கவும் இமையிருக்குது பார்வையில் கண்ணிருக்குது!
துடிக்கவும் ஊடலிருக்குது துஞ்சவும் மார்பிருக்குது!
அன்பிலும் துணையிருக்குது பகுத்தறியும் பண்பிருக்குது!கெட்ட தனியுடைமை போரிடும் உலகினை எதிர்த்து
என்றும் போராடுகின்ற துணிவிலும் வாழ்விருக்குது!-
நட்பிலும் நாடுகின்ற நலத்திலும் தோழமையிருக்குது!
நல்லவர் உறவினிலே பொதுவுடைமை நேயமிருக்குது!
எல்லாம் வாழுகின்ற சமதர்ம அரசு அமைந்திடும் போது!
இன்பம் என்கின்ற சொல்லுக்கே பஞ்சமில்லை இல்லையே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment