Popular Posts

Sunday, September 19, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:நீயொரு விதிசெய்து

கரைதொடும் வரையினில்
கால்களே அணையாகவே!
தேடுது தேடுது கண்களே! எங்கே எங்கே கரையென்று?
துடுப்பில்லாத படகுக்கோ! அலைகளே மாலுமியானதோ?

விதியே முடியுமென்று?-
யார்சொன்னது?-மூட
விதிதனை எண்ணுதல் விட்டு-
அடியே புதிய
விதிதனை செய்திடுவோமே!
காற்றுத் துணையிருக்கும் வரையினில் [எந்த
கடலிலும் தொடரும் வாழ்க்கையடி!
சிலரோ!
விதியுண்டு ஒதுக்கிவிட்டு கடமையைசெய் என்பாரே!
சிலரோ!
விதிக்குள் அடங்கி அதன்வழி செல் என்றும் சொல்வாரே!
வேறு சிலரோ!-மூட
விதி என்பது இல்லையென்றாலும் இருந்தாலும் நீயொரு
விதிசெய்து அதன்வழி ஒழுங்கு வழுவாம்லே வாழச் சொல்வாரே!

கரைதொடும் வரையினில்
கால்களே அணையாகவே!
தேடுது தேடுது கண்களே! எங்கே எங்கே கரையென்று?
துடுப்பில்லாத படகுக்கோ! அலைகளே மாலுமியானதோ?

No comments: