சோகத்தின் அடையாளமா?
சிந்தனையின் அடையாளமா/
அழகின் அடையாளமா?-இல்லை
சோம்பேறிகளின் அடையாளமா?
எதுவென்று தெரியவில்லை!
ஆனால் தாடியோ!
புல்லைப் போலவே மண்டிக்கிடக்குது தாடியுள்ள முகத்தினிலே!
ஞானியும் தாடி வெச்சு இருக்காரு!-விரக்தி
ஆனவரும் தாடி வெச்சு இருக்காரு!-காதல் தோல்வி
ஆனவ்ரும் தாடி வெச்சு இருக்காரு- தீவிர
வாதிகளும் தாடி வெச்சு இருக்காங்க!முடிதனை
எடுத்திட மறந்தாரும் தாடி வெச்சி இருக்காங்க!
சங்க காலத்துல கருந்தாடி ஆண்மைக்கு அழகுனு சொன்னாங்க! நாகரீகமா
குறுந்தாடி வெச்சு சிலகாலம் சிலரும் அலட்டி இருந்தாங்க!
எது எப்படி இருந்த போதில்லும் தாடி வளர்த்ததாலே மழிக்கிற செலவு மிச்சமாச்சுதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment