இயற்கையான
காதலின்ப அன்பாம்
என்வார்த்தையின் வசீகரமே!- நம்
இனியவாழ்வின் விருட்சமே!
உலகின் தீராத நறுமணங்களின் காட்டுவனங்கள்
புதைந்து கிடப்பன எத்தனையோ?
எந்தத் திசையிலோ? யாரும் அறியாமலே
அரும்பி மணத்திடும் பூக்கள்தான் எத்தனையோ?
அந்த ஆலமரத்து நிழலும்
இந்த சிறிய புல்லின் நிழலும் சமமாகவே எந்தனுக்கே காதலியே
வியப்பானதே ஓர் இயற்கை அற்புதம் ஆனதோ?
வாழ்க்கைப் பயணம் முழுவதுமே கண்ணில் கொள்ளாத காட்சிகளே!-அன்பே என் உணர்வு
வான்கரையேறி எல்லையில்லாத இன்பந்தான் கொண்டே ததும்பிடுதே!
பூமிப் பந்தின் இயற்கைஅன்னை எனக்குள் ஏதேதோ சொன்னாளே!
என்பள்ளிக்கூடமும் எனக்குப் போதிமரம் ஆனதே!
என்புத்தகங்கள் எனக்குப் பகுத்தறிவினை தந்ததே!
என்வீட்டு பூவரசும் எனக்கு ஆசாணானதே!
என் தேச நதிகளெல்லாம் எனக்கு ஒற்றுமை சொன்னதே!
என்னூரின் மலையருவி கூட ஓர்கவிதை ஆனதே!அந்த
சின்னஞ்சிறு எறும்புகூட என்கூட தோள்கொடுக்கும் தோழனானதே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment