தன்கையில்
வரைபடமில்லை எரிபொருள் இல்லை -ஒரு
தேடுதல் மட்டும் கொண்டு-தினமும்
வானில் பறக்கும் பற்வைகளே!
அந்தப் பறவைகளே!
தன் தேவைக்கு அதிகமாய் என்றும் சேர்த்து வைப்பதில்லையே!
அடுத்தவர் நலனையே என்றும் பறித்ததில்லையே!
அதிகாரத்தால் யாரையும் அடிமைப் படுத்துவதில்லையே
விலைவாசி ஏற்றத்தால் என்றும் அவை பாதித்ததில்லையே
வாக்குக்காக உறையில் காசு என்றும் வாங்கியதில்லையே-கிம்பளம்
வாங்கவேண்டிய அவசியம் அவற்றிற்கு என்றும் ஏற்பட்டதில்லையே!போலி அரசியல்
வாதிகளையே தேர்ந்தெடுத்துவிட்டு அவையென்றும் ஏமாந்ததில்லையே!
-தன்
தேடுதலில் அவையென்றும் அலைந்து திரிந்து சளிப்பதில்லையே!
வாழ்வினை ஒவ்வொரு நாளும் புதிதாய் சந்திப்பதிலே என்றும் பின்வாங்குவதில்லையே!
உலகமே!மனிதர்களுக்குள்ளே! அனுதினமும்
தன் தேவையற்ற காரணங்களாலே ஒருஅதிகார யுத்தம் நடத்தும் வேளையிலே
அந்த பறவைகளே எல்லாத் துன்பங்களையும் தாண்டி தங்களின் தேடலுக்காகவே!
தன்வாழ் நாளெல்லாமே தங்களின் பாதையிலே பறக்கின்றனவே!
தினமும்
வானில் பறக்கும் பற்வைகளே!
அந்தப் பறவைகளே!
தன் தேவைக்கு அதிகமாய் என்றும் சேர்த்து வைப்பதில்லையே!
அடுத்தவர் நலனையே என்றும் பறித்ததில்லையே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment