ஆகாசத்தில் முகம்பார்க்கும் -மண்ணின்
கோடிகோடிப் பூக்களே!-பூமித்தாயே
தன்னை ஒவ்வொரு நாளும்
எத்தனை எத்தனை பூக்களாலே தன்னையே அலங்காரமே செய்து மகிழ்கின்றாளோ?
காதலி நீயே !
வேப்பம்பூவின் வாசமோ?
ஏ! நீயும்
எள்ளுப் பூவின் அழகோ?
அந்த
தும்பைப் பூவின் தேனோ?
மஞ்சள்
பூசனிப் பூவின் நிறமோ?
என்று ஏதேதோ! நானும் காதலி உன்னையே-எத்தனையோ?
பூக்களுக்கு உவமைசொல்லித் தோற்றுவிட்டேன்
எந்தப்பூவும் உனக்கு உவமை இல்லையடி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment