மெளனமே! நம்பிரிவாம் ஊடல் அமைதியானதோ?
மெளனமே !நம்காதலினை வேதமாக்கியதோ?
மெளனமே !நம்தவறினையே யோசிக்க வைத்ததோ?
மெளனமே ! நம்மிதய வலிதனுக்கே மாமருந்தானதோ?
மெளனமே !நம்சேரும் உள்ளங்களின் நம்பிக்கையானதோ?
மெளனமே !நம்வெட்டி வாதங்களையே அழிக்கவந்ததோ?
மெளனமே ! நாம்மீண்டும் உறவாடவே வழிசொன்னதோ?
மெளனமே ! நம்காதல் தியானத்திற்கே நிலையானதோ?
மெளனமே ! நம் நல்வாழ்வினிற்கே சம்மதமானதோ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment