தேடுகின்றனவே! தேடுகின்றனவே!-வேர்களே!
தேடுகின்றனவே! நம் பாரம்பரியத்தையே
தேடுகின்றனவே!
போதிக்கின்றனவே!போதிக்கின்றனவே!-கிளைகளே!
போதிக்கின்றனவே!திசைகளில் விரிந்து
நம் உறவையும் நட்பையும் போதிக்கின்றனவே!
விளக்கானவையே விளக்கானவையே -பூக்கள் ஒளிவிடும்
விளக்கானவையே!அன்பையே விளக்கிடுமே!
காய்கள் இளம்சேய்கள் அல்லவா!
கனிகள் வரும்தலைமுறையின் விதைகள் அல்லவா!
இலைகள் வரலாற்றின் தொலைதூரங்கள் அவை
ஆடை உணவு கூரையானது அல்லவா!
படர்ந்த கொடிகளின் மலர்ந்த பூக்கள்
ஆனந்த வாழ்வின் சிரிப்புதனையே அர்த்தப் படுத்தியனவே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment